இதனால் பாசன வாய்க்காலில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் தேங்கிசாக்கடையாக மாறி விட்டது. இந்த சாக்கடை நீரில் பன்றிகள் படுத்து புரள்கிறது. மேலும் கடுமையான துர்நாற்றமும் வீசுகிறது. தேங்கி கிடக்கும் சாக் கடை நீரில் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றது. எனவே நகரெங்கும் கொசுக்கடியால் குழந்தைகள், பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. இதனால் பல தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மர்ம காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனை பேராவூரணி பொதுப் பணித்துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. மேலும் கடந்த 1 வருடமாக இப்பகுதியில் உள்ள தெரு குழாய்களில் குடிதண்ணீரும் வருவதில்லை. தெரு விளக்குகளும் இரவில்எரிவதில்லை. பேரூராட்சி அலுவலர்களும் குறைகளை தீர்ப்பதில் அக் கறை செலுத்துவதில்லை.எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 coment rios: