மலைப்பகுதிகளில் அடிப்படை பேருந்து கட்டணத்துடன் 20 சதவிகிதம் அதிகமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விரைவு பேருந்தில் 30 கி.மீ.க்கு தற்போதைய கட்டணம் ரூ.17 ஆக இருந்தது. ஆனால் மாற்றியமைக்கப்பட்டுள்ள கட்டணம் ரூ.24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிநவீன சொகுசு இடைநில்லா பேருந்து மற்றும் புறவழிச்சாலை இயக்க பேருந்து கட்டணம் 30 கி.மீக்கு ரூ.18லிருந்து ரூ.27 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வால்வோ பேருந்துகளுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.33ல் இருந்து ரூ.51 ஆக உயர்கிறது.
இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளுக்கும் இந்த கட்டண உயர்வு செல்லும் என கூறப்பட்டுள்ளது. புதிய கட்டண உயர்வின்படி சுங்க வரி மற்றும் விபத்து காப்பீட்டு வரியும் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட உள்ளது.



0 coment rios: