இவர்கள் வெள்ளிக்கிழமை இரவு வயலுக்கு சென்று தண்ணீர் பாய்ச்சி விட்டு, பட்டுக்கோட்டை- அறந்தாங்கி சாலையில் ஆற்றுப்பாலத்தில் வந்து கொண்டிருந்தனர்.அப்போது, அந்த வழியாக கரும்பு ஏற்றி வந்து கொண்டிருந்த டிராக்டர் திடீரென மோதியதில் சம்பவ இடத்திலேயே பாலகிருஷ்ணன் பலியானார். தங்கராசு காயமடைந்த நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் பாலகிருஷ்ணன் உடலை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன விவசாயி பாலகிருஷ்ணனுக்கு ஜெயா என்ற மனைவியும், 4, 2 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

நன்றி: தீக்கதிர்
0 coment rios: