
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கடியாபட்டியில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு ஊர்ப்பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் நடத்தப்படும் மூன்றாம் ஆண்டு மின்னொளி கபடிப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கியது. இப்போட்டி நேற்றுமுன்தினம் இரவு 12.30 மணிக்கு முடிவடைந்தது.
இதில் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, அறந்தாங்கி, தஞ்சாவூர், நத்தம், கரூர் என 34 நான்னு அணிகள் கலந்துகொண்டனர். பல்வேறு சுறறுக்களால் நடத்தப்பட்ட இப்போட்டியில் தஞ்சாவூர் அணி முதல் பரிசையும், இரண்டாம் பரிசை விராச்சிலை அணியும், மூன்றாம் பரிசை கடியாபட்டி அணியும் நான்காம் பரிசை அரவப்பட்டி அணியும் தட்டிச் சென்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பெற்றது. விழா ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவைக் காண ராயவரம், இளஞ்சாவூர், சாத்தான் கோவில், கோட்டையூர் சுற்றுவட்டார இளைஞர்கள் பொதுமக்கள் கண்டு களித்தனர்.
0 coment rios: