நேற்று காலை நடைபெற்ற பந்தயத்தில் பெரிய மாடு, நடுமாடு, கரிச்சான் மாடு என மூன்று பிரிவுகளின் அடிப்படையில் போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி அவனியாபுரம், பொன்பேத்தி, திருவையாறு, மருங்கூர், ஆட்டுக்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து கொண்டு வரப்பட்ட மாடுகள் போட்டியில் பங்கு பெற்றது.
முதல் பரிசாக ரூ.20,001 பெரிய மாட்டில் வெற்றி பெற்ற அவனியாபுரம் ஷிரிஸி மோகன் குமாருடைய மாட்டிற்கும், இரண்டாவது பரிசாக ரூ.18,001 வெற்றி பெற்ற திருச்சி மாவட்டம் கிளியூர் அசோக் என்பவரது மாட்டிற்கும், மூன்றாவது பரிசாக ரூ.16,001 வெற்றிபெற்ற பொன்பேத்தி மருதுபாண்டிய வெள்ளாளதேவர் மாட்டிற்கும் வழங்கப்பட்டது.
பந்தய நிகழ்ச்சியை சாலையின் இருபுறமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

0 coment rios: