திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தேரோட்டம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாயொட்டி நடைபெற்ற மஹா ரத தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழா கடந்த 23ஆம் கொடியோற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ஆம் நாளான இன்று, பஞ்ச மூர்த்திகளின் மகாரத தேரோட்டம் நடைபெற்றது. காலை 7 மணியளவில் விநாயகர் தேரும், அதன் பின்பு முருகர் தேரும் மாட வீதிகளில் உலா வந்து நிலையை அடைந்தன. பின்னர் அண்ணாமலையாரின் மஹா ரத தேரோட்டம் தொடங்கியது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள், நமச்சிவாயா முழக்கத்திற்கிடையே வடம் பிடித்து தேர் இழுக்க, மஹாரதம் மாட வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.
0 coment rios: