பேராவூரணி அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம்.
பேராவூரணி அருகே உள்ள மணக்காடு ஊராட்சி பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை. இதனால் 150–க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று கிராம மக்கள் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார்.
மார்க்சிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பையன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, நிர்வாகிகள் வீரப்பெருமாள், சாத்தையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஊராட்சியில் மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
0 coment rios: