Wednesday, October 25, 2017

பேராவூரணி அருகே மரத்தில் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி.

பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மகன் நீலகண்டன் (வயது22). இன்னும் சில நாட்களில் வேலைக்காக வெளிநாடு செல்ல இருந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை அவர், கொன்றைக்காடு கடைவீதிக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் அவருடைய கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த நீலகண்டனை, பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நீலகண்டன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: