தஞ்சையில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.
அம்மாப்பேட்டையில் அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே பல்லவராயபேட்டையில் அரசுப் பேருந்து மீது தனியார் பேருந்து மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. அரசுப் பேருந்தின் மீது வேகமாக வந்து மோதிய தனியார் பேருந்தால் பேருந்தின் முன் பக்கம் சுக்குநூறாகியது. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒரு பெண் பயணி உள்பட மேலும் ஒருவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதனிடையே விபத்தில் சிக்கிய பேருந்துகளை கிரேன் மூலம் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பலத்த மழை காரணமாக தஞ்சாவூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
0 coment rios: