பேராவூரணி அருகே விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்.
தஞ்சைமாவட்ட விசைப்படகுகள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் இதையடுத்து தஞ்சைமவாட்டத்தில் உள்ள மல்லிபட்டினம் சேதுபாவாசத்திரம் மற்றும் கல்லிவயல்தோட்டம் ஆகிய துறைமுகங்களில் உள்ள 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை இதையடுத்து விசைபடகுகள் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இதன் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட விசைப்படகுகள் சங்கக்கூட்டம் கல்லிவயல்தோட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மீனவர் சங்க மாநில செயலாளர் தாஜூதீன்; தலைமை தாங்கினார்; மாவட்ட தலைவர் இராஜமணிக்கம், மாவட்ட செயலாளர் வடுகநாதன், மல்லிப்பட்டினம் சங்க செயலாளர் மணிகண்டன்;, கள்ளிவயல்தோட்டம் சங்க பொருளாளர் இப்ராகீம், ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலைவகித்தனர் இதில் கூட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்ய இழுவலை படகுகள் 70 சதவீத மானியம், 20 சதவீதம் வங்கி கடன், 10 சதவீதம் படகு உரிமையாளர் பங்களிப்புடன் வழங்குவதாக கூறும் திட்டத்தை கைவிட்டு மீனவர்கள் விரும்பும் தொழில் செய்ய தற்போதுள்ள விசைபடகுகளை அரசு எடுத்து கொண்டு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் வழியுறுத்தி நிறைவேற்றும் வரை தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் கடலுக்குச்செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்
0 coment rios: