பேராவூரணி சேதுசாலையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக்மதுக்கடையால், வணிகர்கள், பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவிகள், அருகில் உள்ள மருத்துவமனை, தாலுகா அலுவலகம் செல்லும் பொதுமக்கள், அரசுப் பணியாளர்கள் என பலதரப்பட்டோரும் பாதிக்கப்பட்டனர்.இந்த மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி அக்டோபர் 22 அன்று தமிழக மக்கள்புரட்சிக்கழகம் ஒருங்கிணைப்பில் சிபிஎம், சிபிஐ, மதிமுக மற்றும் பல்வேறு இயக்கங் கள் சார்பில் பேராவூரணி அண்ணாசிலை அருகில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு வந்த வட்டாட்சியர் மற்றும்பட்டுக்கோட்டை டிஎஸ்பி உள்ளிட்ட அலுவலர்கள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்றனர். இதையடுத்து அன்றைய தினம் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் அக்டோபர் 28 சனிக்கிழமையன்று மாலை பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரசுத் தரப்பில் டாஸ்மாக் மாவட்டமேலாளர் பூங்கோதை மற்றும் காவல்துறை,வருவாய்துறை அலுவலர்களும், போராட்டக் குழு சார்பில் ஒருங்கிணைப்புக்குழு தலைவரும், தமிழக மக்கள் புரட்சிக்கழக கொள்கை பரப்பு செயலாளருமான ஆறு.நீலகண்டன், மதிமுக சேது ஒன்றியச்செயலாளர் பாலசுப்பிரமணியன், திராவிடர் விடுதலைக்கழகம் சித.திருவேங்கடம், நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் திலீபன்,மெய்ச்சுடர் வெங்கடேசன், சாமானிய சகாக்கள் சமந்தா, மீத்தேன்திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தா.கலைச்செல் வன், கிறித்தவ நல்லெண்ண இயக்கம் ஆயர் த.ஜேம்ஸ், மனிதநேய ஜனநாயக கட்சிஅப்துல் சலாம் உள்ளிட்ட பல்வேறு கட்சி, இயக்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், வரும் டிசம்பர் 30 ஆம்தேதிக்குள் 60 நாள் கால அவகாசத்தில் மதுக்கடை அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட போராட்டக்குழுவினர், அடுத்து நடைபெறுவதாக இருந்த போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.
0 coment rios: