அக்டோபர் 3 (October 3) கிரிகோரியன் ஆண்டின் 276 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 277 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 2333 – கொஜொசியோன் நாடு (தற்போதைய கொரியா) டங்கூன் வாஞ்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது.
1739 – ரஷ்ய-துருக்கி போர், 1736–1739 முடிவில் ரஷ்யாவுக்கும் ஒட்டோமான் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
1778 – பிரித்தானியாவின் கப்டன் ஜேம்ஸ் குக் அலாஸ்காவில் தரையிறங்கினார்.
1908 – பிராவ்தா செய்திப்பத்திரிகை லியோன் ட்ரொட்ஸ்கியினாலும் அவரது சகாக்களினாலும் வியென்னாவில் வெளியிடப்பட்டது.
1918 – மூன்றாம் போரிஸ் பல்கேரியாவின் மன்னனாக முடிசூடினான்.
1929 – சேர்பியா, குரொவேசியா, சிலவேனியா இணைக்கப்பட்டு அதற்கு யூகொஸ்லாவிய இராச்சியம் எனப் பெயரிடப்பட்டது.
1932 – ஈராக், பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1935 – இத்தாலி எதியோப்பியாவைக் கைப்பற்றியது.
1942 – விண்வெளிப் பறப்பு: செருமனியில் இருந்து ஏ4-ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. முதன் முதலில் விண்வெளியை அடைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் இதுவாகும்.
1952 – ஐக்கிய இராச்சியம் வெற்றிகரமாக அணுவாயுதச் சோதனையை நடத்தியது.
1962 – சிக்மா 7 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி ஷீரா 6 தடவை பூமியைச் சுற்றினார்.
1981 – வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் “மேஸ்” சிறைச்சாலையில் ஐரிஷ் குடியரசு இராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.
1985 – அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.
1990 – ஜேர்மனியின் கிழக்கும் மேற்கும் ஒன்றாக இணைந்தன. ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு மேற்கு ஜேர்மனியுடன் இணைந்தது.
1993 – சோமாலியாவின் போர்பிரபு முகம்மது ஃபரா ஐடிட் என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 அமெரிக்கப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர்.
2001 – வங்காள தேசத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் கலீதா சியாவின் பங்களாதேஷ் தேசியக் கட்சி வெற்றி பெற்றது.
2013 – இத்தாலியில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 300 பேர் வரையில் உயிரிழந்தனர்.
பிறப்புக்கள்
1862 – ஜானி பிரிக்ஸ், ஆங்கிலத் துடுப்பாட்ட வீரர் (இ. 1902)
1917 – பீட்டர் கெனமன், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1997)
1940 – முரு. சொ. நாச்சியப்பன், மலேசிய எழுத்தாளர்
1954 – சத்யராஜ், தமிழ்த் திரைப்பட நடிகர்
1957 – இராபர்ட்டோ செவெதோ, உலக வணிக அமைப்பு தலைவர்
இறப்புகள்
1226 – அசிசியின் பிரான்சிசு, இத்தாலியப் புனிதர் (பி. 1181)
1867 – எலியாஸ் ஓவே, தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் (பி. 1819)
1995 – ம. பொ. சிவஞானம், தமிழறிஞர், அரசியல்வாதி (பி. 1906)
1999 – அக்கியோ மொறிட்டா, சோனி நிறுவனத்தைத் தோற்றுவித்தவர் (பி. 1921)
2009 – எஸ். இராமச்சந்திரன், இலங்கையின் மலையகத்தை சேர்ந்த ஓவியர் (பி. 1942)
2011 – ஆ. கந்தையா, ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1928)
சிறப்பு நாள்
ஜேர்மனி – இணைப்பு நாள் (1990)
ஈராக் – விடுதலை நாள் (1932)
Tuesday, October 3, 2017
Author: Unknown
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: