பேராவூரணி அடுத்த நெடுவாசல் கிராமத்தில் சம்பா நடவுக்காக நாற்று பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
நெடுவாசல் பகுதியில் சம்பா சாகுபடி பணி தீவிரமடைந்துள்ளது. பருவமழை படிப்படியாக குறையத் தொடங்கிய காலகட்டத் தில் எங்கள் பகுதியில் உள்ள விவசாயிகள் அனைவரும் நெல் உள்ளிட்ட விவசாய பயிர்களை பாதுகாப்பதற்காக ஆழ்துளை கிணறு அமைத்தோம். அதனை பயன்படுத்தி விவசாயம் செய்துவந்தோம். ஆனால் தற்போது பருவமழை பொய்த்துப்போனதால் ஆழ்துளை கிணறுகள் எல்லாம் வற்றிப்போய் தண்ணீர் வராமல் நின்றுபோனது.இருப்பினும் சில விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளை வரும் சிறிதளவு தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்துவருகிறோம் என்றனர்.
0 coment rios: