பேராவூரணி வட்டார அளவிலான குழு விளையாட்டு போட்டி நிறைவு நாள் விழா டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளி விளையாட்டரங்கில் புதன்கிழமையன்று நடைபெற்றது.பள்ளிக் கல்வித்துறை சார்பில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் பேராவூரணி வட்டார அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் கடந்த 11 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெற்றது. நிறைவு நாள் நிகழ்ச்சியில்நடைபெற்ற கபாடிப் போட்டியை பள்ளி தாளாளரும், மெட்ரிக் பள்ளிகள் சங்கமாநில துணை பொதுச்செயலாளருமான டாக்டர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு உடற்கல்வி ஆசிரியர் மதியழகன், கர்ணன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
உடற்கல்வி ஆசிரியர் முரளி வரவேற்றார்.14 வயதுக்குட்பட்டோர் கபாடி போட்டி ஆண்கள் பிரிவில் புதுத்தெரு பள்ளிமுதலிடமும், ஜே.சி.குமரப்பா பள்ளி இரண்டாமிடமும், பெண்கள் பிரிவில்புனல்வாசல் புனித அன் னாள் பள்ளி முதலிடமும், குருவிக்கரம்பை பள்ளி இரண்டாமிடமும் பெற்றனர்.17 வயதுக்குட்பட்டோர் கபாடி போட்டி ஆண்கள் பிரிவில் குருவிக்கரம்பை பள்ளி முதலிடமும், ஏனாதிகரம்பை பள்ளி இரண்டாமிடமும், பெண்கள் பிரிவில் புனல்வாசல் புனிதஅன்னாள் பள்ளி முதலிடமும், புதுத்தெரு பள்ளி இரண்டாமிடமும்,19 வயதுக்குட்பட்டோர் கபாடி போட்டி ஆண்கள் பிரிவில்பெருமகளூர் பள்ளி முதலிடமும், குருவிக்கரம்பை இரண்டாமிடமும், பெண்கள் பிரிவில் குருவிக்கரம்பை முதலிடமும், பெருமகளூர் இரண் டாமிடமும் பெற்றனர்.
நன்றி:தீக்கதிர்
0 coment rios: