உலகப் புகழ் பெற்ற பிள்ளையார்பட்டி கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கற்பக விநாயகரின் ஆசி பெற்றனர். இன்று பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு கோயிலின் கோபுரங்கள், தளவரிசைகள் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டன. கடந்த 24ந்தேதி யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று அதிகாலை 4.30மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜையும், காலை 8 மணிக்கு மஹா பூர்ணாகுதி, தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் இராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம், தொடர்ந்து மூலஸ்தான மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் லட்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் ஆலய கும்பாபிஷேகம் காட்சிகள்.

0 coment rios: