தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில், உலக புத்தக தின விழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட நூலக அலுவலர் யசோதா தலைமையில் நடைபெற்றது.மாவட்ட நூலக ஆய்வாளர் ப.காரல் மார்க்ஸ் முன்னிலை வகித்தார். சென்னை கன்னிமாரா நூலக தலைமை அலுவலர் ஆவுடையப்பன் கலந்து கொண்டு, ஓவியப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற, செங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர் ப.சுதாகரன், கட்டுரைப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற க.சாந்தினி பிரியா ஆகியோரை பாராட்டி கேடயம், சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் பேராவூரணி ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பாம்பன் பாலம் மாதிரியை அமைத்து முதலிடம் பெற்ற மாணவிகள் நீவிதர்சினி, சாந்தினிபிரியா, மாணவர் சிவராஜ் ஆகியோருக்கும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் ஜே.செந்தில் ஆகியோருக்கும் பேராவூரணி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கோ.தமிழ்செல்வி, கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் கோ.சாமுண்டீஸ்வரி, தலைமையாசிரியர் நா.ஜோதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரெ.பர மசிவம் மற்றும் கிராமத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.
நன்றி : தீக்கதிர்
0 coment rios: