Sunday, February 26, 2017

பேராவூரணியில் நடைப்பெற்ற குதிரைவண்டி எல்கைப் பந்தயம் புகைப்படத் தொகுப்பு.

பேராவூரணியில் நடைப்பெற்ற குதிரைவண்டி எல்கைப் பந்தயம் புகைப்படத் தொகுப்பு.









பேராவூரணியில் பிள்ளையார் குரூப்ஸ் நடத்தும் 15 ஆம் ஆண்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. கரிச்சான் குதிரை, நடு குதிரை, புது பூட்டு குதிரை பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது
பேராவூரணியில் நடைப்பெற்ற மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் புகைப்படத் தொகுப்பு.

பேராவூரணியில் நடைப்பெற்ற மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் புகைப்படத் தொகுப்பு.












பேராவூரணியில் பிள்ளையார் குரூப்ஸ் நடத்தும் 15 ஆம் ஆண்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் பெரியமாடு, கரிச்சான்மாடு, நடுமாடு பூஞ்சிட்டு மாடு உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 11வது நாளாக போராட்டம்.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 11வது நாளாக போராட்டம்.







ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டம் 11வது நாளாக நீடித்துள்ளது. மாணவர்கள் மற்றும் திரையுலகினர் பங்கேற்பால் போராட்டக்களம் மேலும் வலுப்பெற்றுள்ளது. கடந்த 10 நாட்களாக வெவ்வேறு போராட்டங்களை முன்னெடுத்த நெடுவாசல் மக்கள், இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெடுவாசலுக்கு வந்துள்ள கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும், உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக ஒன்றுகூடிய தாங்கள் தற்போது விவசாயிகளின் நலன்களுக்காக ஒன்று திரண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Saturday, February 25, 2017

பேராவூரணியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம்.

பேராவூரணியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம்.




பேராவூரணியில் பிள்ளையார் குரூப்ஸ் நடத்தும் 15 ஆம் ஆண்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் பெரியமாடு, கரிச்சான்மாடு, நடுமாடு, கரிச்சான் குதிரை, நடு குதிரை, புது பூட்டு குதிரை உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் கலந்து கொள்கின்றன. போட்டியை சிங்கவனம் ஜமீன்தார் துவங்கி வைத்தார்.
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் குறித்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி.

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் குறித்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி.






பேராவூரணி அடுத்த நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் குறித்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி.

இதில் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பேரணி மேற்கொள்ளப்பட்டது.

Friday, February 24, 2017

பேராவூரணியில் நாளை மாபெரும் மாட்டுவண்டி குதிரை வண்டி எல்கை பந்தயம்.

பேராவூரணியில் நாளை மாபெரும் மாட்டுவண்டி குதிரை வண்டி எல்கை பந்தயம்.




பேராவூரணி ஸ்ரீ பிள்ளையார் குரூப்ஸ் நண்பர்கள் அசோசியேசன் நடத்தும் 15- ஆம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி குதிரை வண்டி எல்கை பந்தயம் வருகின்ற மாசி 14(26.02.2017) ஞாயிற்றுக்கிழமை நடைபெருகிறது.
பேராவூரணி அடுத்த செங்கமங்கலம் சிவன் கோவில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு
வழிப்பாடு.

பேராவூரணி அடுத்த செங்கமங்கலம் சிவன் கோவில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிப்பாடு.




மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவ ஆலயங்களில் இன்று மாலை தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெற உள்ள நான்கு கால அபிஷேகத்திற்கான பொருட்களை பக்தர்கள் அளித்து வருகின்றனர்.

இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் கிராமமக்கள் போராட்டம்.

இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் கிராமமக்கள் போராட்டம்.


பேராவூரணி அடுத்த நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரமான விவசாயம் அழிந்துவிடும் என்று அப்பகுதி கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி கடந்த 19 மற்றும் 21-ந் தேதிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள இடத்தை பார்வையிட சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அதிகாரிகளை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு அவர்கள் சென்ற காரையும் சிறைபிடித்து வைத்து போராட்டம் நடத்தினர். பின்பு, அவர்களிடம் அதிகாரிகள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி வாகனத்தை மீட்டுச் சென்றனர். இதன்தொடர்ச்சியாக அப்பகுதி பெண்கள் ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.

மேலும் இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி நெடுவாசல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் போராட்ட களத்திற்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். மேலும், அணவயல், வடகாடு, மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் ஆதரவு கூட்டம் நடத்தியும், திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் கட்சிகள்

இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம், நெடுவாசல் பகுதியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள இடத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பார்வையிட்டார்.

இதற்கிடையில் நேற்று நெடுவாசலில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் அருகே நூற்றுக்கணக்கான பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டு, இந்த திட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இந்த திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று தெரிவித்தனர்.

Thursday, February 23, 2017

மாவடுகுறிச்சி ஊராட்சியில் பகுதியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி

மாவடுகுறிச்சி ஊராட்சியில் பகுதியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி



மாவடுகுறிச்சி ஊராட்சியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பேராவூரணியில் கடும் பனிப்பொழிவு.

பேராவூரணியில் கடும் பனிப்பொழிவு.



பேராவூரணியில் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலே கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. காலை 8 மணி வரை, முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு இருந்தது. இதனால் காலையில் வேலைக்கு சென்றவர்கள் கடும் பனிப்பொழிவால் அவதிக்குள்ளாகினர்.

Wednesday, February 22, 2017

Tuesday, February 21, 2017

பேராவூரணி வருகின்ற பிப்ரவரி 26 மாபெரும் மாட்டுவண்டி குதிரை வண்டி எல்கை.

பேராவூரணி வருகின்ற பிப்ரவரி 26 மாபெரும் மாட்டுவண்டி குதிரை வண்டி எல்கை.






பேராவூரணி ஸ்ரீ பிள்ளையார் குரூப்ஸ் நண்பர்கள் அசோசியேசன் நடத்தும் 15- ஆம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி குதிரை வண்டி எல்கை பந்தயம் வருகின்ற மாசி 14(26.02.2017) ஞாயிற்றுக்கிழமை நடைபெருகிறது.
புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு போராட்டம்.

புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு போராட்டம்.



புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கும். எனவே அதனை செயல்படுத்தக் கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் வருகிற 26-ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக உரிமை மீட்புக் குழுவினர் அறிவித்துள்ளனர். இதனிடையே சட்டக்கல்லூரி மாணவர்கள் கேட்டு கொண்டதன் பேரில் அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று காலை கல்லூரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும் போது, புதுக்கோட்டை நெடுவாசலில் செயல்படுத்த போவதாக அறிவித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். திட்டத்தை கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இதற்காக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரண்ட மாணவர்கள், அமைப்புகளை ஒன்று திரட்டி வருகிறோம் என்றனர்.


நேற்று நெடுவாசல் வருவாய்த்துறை அதிகாரிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பகுதிகளை பார்வையிட சென்றபோது அவர்களை அதிகாரிகள் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Monday, February 20, 2017

பேராவூரணி அடுத்த நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.

பேராவூரணி அடுத்த நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.


புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அளித்த ஒப்புதலை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
எதிர்பாராத வறட்சியும், எதிர்ப்பார்ப்புக்கு அதிகமாக பெய்யும் பருவமழையும் விவசாயத்திற்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த சூழலில், ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிபொருள் எடுக்க நாடு முழுவதும் பட்டியலிடப்பட்டுள்ள 31 இடங்களில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியையும் அறிவித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருப்பது அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட இருந்த மீத்தேன் எரிவாயு திட்டம், விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்ட நிலையில், தற்போது அதேபோன்றதொரு திட்டத்தை வேறு வடிவத்தில் கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை பற்றி எந்தவித விளக்கமும் தராமல், தங்களின் கருத்துகளையும் கேட்டறியாமல், இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கும் மத்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது என அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என கூறப்படும் நிலையில், அது குறித்து உரிய விளக்கம் தர வேண்டும் எனக்கோரும் விவசாயிகள், அவ்வாறு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமேயெனில் அதனை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
காவிரி நீர், கானல் நீராகிப் போன நிலையில், டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்று பாசனத்தை நம்பியே விவசாயம் நடைபெற்று வருகிறது. பட்டியலிட முடியாதா பல பிரச்னைகளால் விவசாயம் நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் நிலையில், அரசின் இதுபோன்ற புதுப்புது திட்டங்களும், விவசாயிகளை அச்ச மனநிலைக்குள்ளே இட்டுச் செல்கிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தையும், விவசாயிகளையும் கா‌க்க வேண்டும் என்பதே நெடுவாசல் பகுதி கிராம மக்களின் கருத்தாக உள்ளது.
புதுக்கோட்டை அருகே உள்ள எஸ்.குளவாய்ப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே உள்ள எஸ்.குளவாய்ப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.


புதுக்கோட்டை அருகே உள்ள எஸ்.குளவாய்ப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற மாடுகள் இலக்கை நோக்கி சீறிபாய்ந்த காட்சி.

Sunday, February 19, 2017

பேராவூரணி அருகே இடிந்து விழும் நிலையில் பேருந்து நிறுத்தம்.

பேராவூரணி அருகே இடிந்து விழும் நிலையில் பேருந்து நிறுத்தம்.



பேராவூரணி அருகே இடிந்து விழும் நிலையில் பேருந்து நிறுத்தம். பொதுமக்கள் அச்சம்
எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் பேருந்து நிறுத்த கட்டிடம்.பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான 6வது வார்டு நாட்டாணிக்கோட்டை உள்ளது. இந்த ஊரில் பயணிகளின் வசதிக்காக பேருந்து நிறுத்தம் ஒன்று கடந்த 2000, 2001, ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த சாலை வழியாக பேராவூரணியிலிருந்து நாகுடி ஆவுடையார்கோவில் மற்றும் ரெட்டவயல், கட்டுமாவடி, மீமிசல், தொண்டி, இராமேஸ்வரம் ஆகிய ஊர்களுக்கு இது மட்டுமின்றி அரசு கல்லூரியும் இந்த பகுதியில் இருப்பதால் இந்த பேருந்து நிறுத்தத்தின் அருகில் நடப்பட்டுள்ள கிலோ மீட்டரை காட்டும் கல் தெரியாத வகையில் இப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி மறைத்து விட்டனர். இதனால் உடனடியாக இது சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களான இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றி:ILAYARAJA KEERAVANI