மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கு பலகாரங்களை கொடுத்து கொண்டாடி மகிழ்வர்.
அதேபோல் புதுமண தம்பதியர்களுக்கு பெண்ணின் வீட்டில் பல்வேறு பலகாரங்களை தயாரித்து கொடுத்து வருவது காலம்தொட்டு வரும் பழக்கமாக உள்ளது. அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ளதால் வீடுகள்தோறும் முருக்கு, எள் அடை, அதிரசம், சீடை, பயறு உருண்டை, ரவா உருண்டை, மைசூர்பாகு, சுழியன், உள்ளிட்ட விதவிதமான பலகாரங்களை தயார் செய்ய துவங்கியுள்ளனர்.
அதற்கான அரிசி மாவு, ஊற வைத்த அரிசி மாவு, சீனி, ரவை, பயறு உள்ளிட்ட தானியங்களின் மாவுகளை அரைப்பதற்கு மாவுமில்லில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதுதொடர்பாக மாவுமில்லை சேர்ந்தோர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுக்கு முன்பெல்லாம் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே மாவு அரைக்க துவங்கிவிடுவர். ஒரு வாரத்துக்கு இரவு, பகல் என்று தொடர்ந்து மாவு அைரக்கும் பணி இருக்கும். மாவு அரைக்க வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படி அரைத்து கொடுப்போம்.
ஆனால் தற்போது பண்டிகையின் 10 நாட்களுக்கு மட்டுமே வேலை உள்ளது. நாகரீகத்தின் காரணமாக நமது பாரம்பரிய கலாசார பண்புகளை மறந்து ஸ்வீட் கடைகளில் பலகாரங்களை வாங்கி வருகின்றனர். சென்றாண்டு முதல் சற்று கூடுதலாக பலகார மாவுகளை அரைக்க துவங்கியுள்ளனர் என்றார்.
0 coment rios: