தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2016, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ், அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, அவர்கள் (29.09.2016) இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தல் தொடர்பான பயிற்சி குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், தஞ்சாவூர் மாநகராட்சிக்கு வாக்கு எண்ணிக்கை ராஜா சரபோஜி அரசினர் கலைகல்லூரியிலும், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ராஜாஸ் மேல் நிலைப்பள்ளியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பயிற்சியும், தூய அந்தோணியார் மேல் நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் :
தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல் நிலைப்பள்ளியிலும், பூதலூர் ஸ்ரீசிவசாமி அய்யர் மேல் நிலைப்பள்ளியிலும், திருவையாறு சீனிவாசராவ் மேல் நிலைப் பள்ளியிலும், ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவோணம் அரசினர் மேல் நிலைப்பள்ளியிலும், கும்பகோணம் அரசினர் பெண்கள் மகளிர் கல்லூரியிலும், திருவிடைமருதூர் டி.ஏ.மேல் நிலைப்பள்ளயிலும், திருப்பனந்தாள் குமரகுருபர மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியிலும், பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், அம்மாப்பேட்டை பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மதுக்கூர் வடக்கு அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், பேராவூரணி புனவாசல் தூய ஆரோக்கிய அன்னை மேல் நிலைப் பள்ளியிலும், சேதுபாவாசத்திரம் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சி பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள்:
வல்லம், ஒரத்தநாடு, திருவையாறு, திருக்காட்;டுப்பள்ளி, மேலதிருப்பந்துருத்தி, மதுக்கூர், அய்யம்பேட்டை, மெலட்டூர், அம்மாப்பேட்டை, ஆகிய 9 பேரூராட்சிகளுக்கு தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும்,
பேராவூரணி, பெருமகளுர், அதிராம்பட்டிணம், ஆகிய 3 பேரூராட்சிகளுக்கு பேராவூரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஆடுதுறை, திருபுவனம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், வேப்பத்தூர், சோழபுரம், சுவாமிமலை, தாராசுரம், பாபநாசம் ஆகிய 10 பேரூராட்சிகளுக்கும் கும்பகோணம் சிறுமலர் மேல் நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சி ராஜா சரபோஜி கலைகல்லூரியிலும், பட்டுக்கோட்டை நகராட்சி பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், கும்பகோணம் நகராட்சி கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பாதுகாப்பாக வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படும் அறையில் போதிய இட வசதி உள்ளதா என்றும், மின் இணைப்பு, மின்விசிறி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, அவர்கள் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி முதல்வர் திருமதி.ஜி.நிர்மலா, வட்டாட்சியர் குருமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 coment rios: