உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களின் டெபாசிட் தொகை.
தேர்தலுக்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த 1995ம் ஆண்டு அரசாணைப்படி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களின் டெபாசிட் தொகை பெறப்பட்டு வருகிறது. அதன்படி, ஊராட்சி உறுப்பினர் 200, தலைவர் 600, ஒன்றிய உறுப்பினர் 600, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 1,000, பேரூராட்சி, நகராட்சி (3ம் நிலை) உறுப்பினர்கள் 500, நகராட்சி உறுப்பினர் 1,000, மாநகராட்சி உறுப்பினர் 2,000 என டெபாசிட் கட்ட வேண்டு–்ம். எஸ்சி., எஸ்டி பிரிவினராக இருந்தால் இதில் 50 சதவீத தொகை கட்டினால் போதும். இவற்றை நடப்பு தேர்தலில் உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர் செலவு உச்ச வரம்பை மாநிலத் தேர்தல் ஆணையம் மாற்றி அமைத்துள்ளது.
அதன்படி சென்னையைத் தவிர பிற மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கான செலவு உச்ச வரம்பு ரூ.33,750-இல் இருந்து ரூ.85,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர் வேட்பாளர்களுக்கான உச்ச வரம்பு ரூ.56,250-இல் இருந்து ரூ.90,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.தேர்வு மற்றும் சிறப்பு நிலை நகராட்சிகளில் வார்டு உறுப்பினர் வேட்பாளர்களுக்கான செலவு உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டு ரூ.85,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் மற்றும் முதல் நிலை நகராட்சிகளில் இந்த தொகை ரூ.34,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சி கவுன்சிலர் தேர்தலுக்கு ரூ.17,000-ஆக செலவுத் தொகை உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி வார்டு தேர்தலுக்கு ரூ.9,000-ஆகவும், கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு ரூ.34,000-ஆகவும் வேட்பாளர் செலவு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான செலவு உச்சவரம்பு ரூ.85,000 ஆகும். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் வேட்பாளர்களுக்கான செலவுத் தொகை உச்சவரம்பு ரூ.1.70 லட்சம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
0 coment rios: