அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கிராவல் மற்றும் மணல் கலவை நிரப்பும் பணியை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கட்டுமானப் பிரிவு உதவி நிர்வாகப் பொறியாளர்கள் பி. செல்வம், கணபதி, உதவிப் பொறியாளர் எட்வின் ஆகியோர் உடனிருந்தனர்.
ரயில் பாதை பணிகளில் இதுவரை பட்டுக்கோட்டை-அதிராம்பட்டினம்-முத்துப்பேட்டை ஆகிய ஊர்களுக்கு இடையே உள்ள 63 சிறுபாலங்களில் 40 பாலங்கள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.
5 பெரிய பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 2017 மார்ச்சுக்குள் காரைக்குடி-பட்டுக்கோட்டை பணிகளையும், 2018 மார்ச்சுக்குள் பட்டுக்கோட்டை- திருவாரூர் பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
0 coment rios: