தஞ்சாவூர் சட்ட மன்றத் தொகுதி நீங்கலாக அனைத்து தொகுதி வாக்குச்சாவடிகளிலும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth level officers) மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் (Booth level Agents) நாளை 25-09-2016 அன்று சிறப்பு முகாம் நாட்களிலும். காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை ஆஜரில் இருப்பார்கள்.
எனவே, இவ்வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர்கள் தொடர்புடைய வாக்குச்சாவடிகளுக்குச் சென்று அவ்விரு நாட்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் ஏதுமிருப்பின் கோரிக்கை மற்றும் ஆட்சேபணைகளை (Claims and Objections) உரிய சான்று ஆவணங்களுடன் சென்று உரிய படிவங்களில் பூர்த்தி செய்து அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ,அண்ணாதுரை அவர்கள தெரிவித்துள்ளார்.
01-01-2017 அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்திட வயது ஆதாரத்திற்காக பிறப்புச்சான்றிதழ் அல்லது பள்ளிச்சான்று அல்லது பாஸ்போர்ட் நகல் மற்றும் இருப்பிடச்சான்றாகிய வங்கி - கிசான் - நடப்பு அஞ்சலக சேமிப்பு புத்தகம் அல்லது குடும்ப அட்டை - பாஸ்போர்ட் - டிரைவிங் லைசென்ஸ் - வருமான வரி கணக்கு சமர்பித்ததற்கான ஆவணம் அல்லது நடப்பு குடிநீர் - தொலைபேசி - மின்சார அட்டை - எரிவாயு இணைப்பு ரசீது ஆகிய முகவரி சான்று அல்லது பெற்றோர் பெயரில் மேற்கண்ட முகவரிச் சான்று வாக்காளர் படிவத்தில் அளிக்கும் முகவரிக்கு. அஞ்சலகத்திலிருந்து வரப்பெற்ற கடிதம். வாடகை ஒப்பந்த பத்திரம். ஆதார் கார்டு ஏதேனும் ஒரு சான்றாவணத்துடன் தொடர்புடைய வாக்குச்சாவடிக்குச் சென்று படிவம் 6 பெற்று பூர்த்தி செய்து அங்கேயே அளித்திடலாம்.
புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6 ஐயும் (வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் படிவம் 6A மு்லம்). அந்தந்த வாக்குச்சாவடி அலுவலரிடம் பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றாவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலரிடமே 30-09-2016 வரை அளிக்கலாம். பெயர் நீக்கம் செய்திட படிவம் 7. பெயர் மற்றும் முகவரியில் மாற்றம் ஏதும் செய்யப்படவேண்டின். படிவம் 8. அதே தொகுதியில் முகவரி மாற்றம் செய்யப்பட வேண்டின். படிவம் 8A ல் பூர்த்தி செய்து அளிக்கலாம்,
தற்போது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்ட மன்றத் தொகுதிகளிலும் உள்ள வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் மாற்றப்பட்டு வண்ண புகைப்படங்கள் தொடர்புடைய வாக்காளர்களிடமிருந்து பெற்று. வண்ண புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது,
புகைப்படம் மாற்றம் செய்ய வேண்டியவர்களின் பட்டியல் தொடர்புடைய வட்டாட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது, வாக்காளர்கள் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமிருந்து படிவம் 8 ஐ பெற்று புதிய வண்ண புகைப்படத்தை அதில் ஒட்டி பூர்த்தி செய்த படிவத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
0 coment rios: