Wednesday, June 20, 2018

பேராவூரணி தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு பயிற்சி.

பேராவூரணி தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு பயிற்சி.



பேராவூரணி ஏந்தல் அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் திருக்கோயிலில் தீயணைப்பு மீட்பு துறை அலுவலர்கள் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் தீ பிடித்தால் எப்படி அணைப்பது தடுப்பது விளக்க விழிப்புணர்வு செய்முறை பயிர்ச்சி நடத்தி காட்டினார்கள். இந்த நிகழ்வில் நீலகண்டப்பிள்ளையார் திருக்கோயில் செயல்அலுவலர் திரு. கவியரசு தலைமையிலும் மற்றும் ஸ்தானிகர் சங்கரன் வகைறாக்கள் தீயணைப்பு அதிகாரிகள் திருக்கோயில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
பேராவூரணியில் கட்டி முடிக்கப்பட்ட ரயில் நிலையம் பராமரிப்பின்றி காணப்படுகிறது உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

பேராவூரணியில் கட்டி முடிக்கப்பட்ட ரயில் நிலையம் பராமரிப்பின்றி காணப்படுகிறது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

பேராவூரணியில் கட்டி முடிக்கப்பட்ட ரயில் நிலையம் பராமரிப்பின்றி சீரழிந்து வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தின் கடைசி மீட்டர் கேஜ்பாதை என சொல்லப்பட்ட காரைக்குடி - திருவாரூர் இடையே கடந்த மார்ச் 2012 ஆம் ஆண்டு, அகல ரயில் பாதைஅமைக்கும் பணிக்காக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையே ரயில் பாதைகள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. 70 கி.மீ தூரத்தில் சிறியதும், பெரியதுமான பாலங்கள் 40 க்கும் மேற்பட்டவை அமைக்கப் பட்டன. அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டையில் பெரிய அளவில்ரயில்வே நிலையம் அமைக்கப்பட் டுள்ளது. கண்டனூர் - புதுவயல், வாளராமாணிக்கம், மேற்பனைக்காடு, ஒட்டங்காடு இடையே சிறிய ரயில்வே நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையேயான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்த காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையே பயணிகள் ரயில் வெள்ளோட்டமும் விடப்பட்டு, இரண்டு மாத காலம்ஆன நிலையில் இதுவரை மீண்டும் ரயில் இயக்கப்படவில்லை. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பணிகள் தாமதமாவதாக கூறப்படுகிறது. இது ஒரு புறமிருக்க, கட்டி முடிக்கப் பட்ட ரயில் நிலையங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பராமரிப்பின்றி சீரழிந்து வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள புதிய ரயில் நிலைய அலுவலக கண்ணாடி ஜன்னல் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு உள்ளது. ரயில்வே அலுவலர்களோ, பணியாளர்களோ, காவலர்களோ இல்லாத நிலையில் இரவுநேரங்களில் சமூக விரோதச் செயல் கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. காலை, மாலை நேரங்களில் சமூக விரோதிகள் ரயில்வே நிலையத்தில் அமர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சமூக விரோதிகள் அலுவலக கதவுகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உறங்குவதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு இல்லாததால் ரயில்வே நிலையத்தில் நடைபெற்று வரும் சமூக விரோதச் செயல்களை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க ரயில்வே அதிகாரிகள் முன் வர வேண்டும். விரைவில் ரயில் சேவையை விரைந்து தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளன.



பேராவூரணி ஸ்போட்ஸ் கிளப் கபாடி விளையாட்டு வீரர்கள் அணிக்கான வீரர்கள் தேர்வு.

பேராவூரணி ஸ்போட்ஸ் கிளப் கபாடி விளையாட்டு வீரர்கள் அணிக்கான வீரர்கள் தேர்வு.

பேராவூரணி ஸ்போட்ஸ் கிளப் கபாடி விளையாட்டு வீரர்கள் அணிக்கான வீரர்கள் தேர்வு. பேராவூரணி சுற்றுவட்டார கபாடி வீரர்கள் கலந்துகொள்ளவும்.

Tuesday, June 19, 2018

Friday, June 15, 2018

பேராவூரணி ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா.

பேராவூரணி ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா.



பேராவூரணி ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா 03.07.2018 முதல் 20.07.2018 வரை.



பேராவூரணி அருகே அம்மையாண்டி ஊராட்சியில் குடிநீர் கேட்டு மறியல்.

பேராவூரணி அருகே அம்மையாண்டி ஊராட்சியில் குடிநீர் கேட்டு மறியல்.

பேராவூரணி அருகே அம்மையாண்டி ஊராட்சியில் கடந்த 15 நாளாக முறையாக குடிநீர் வரவில்லை. மோட்டார் பழுது காரணமாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படவில்லை. இதனால், தண்ணீர் இன்றி மக்கள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், வெள்ளியன்று காலை பேராவூரணி - புதுக்கோட்டை மெயின் சாலையில், அம்மையாண்டி கடை வீதியில் காலிக் குடங்களுடன் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் அ.ராமலிங்கம், சிபிஎம் கிளைச் செயலாளர் ஆத்மநாதன், சத்தியசீலன், கே.மாரிமுத்து, மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.முருகேஸ்வரி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.தகவலறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் குமரவடிவேல் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய மின் மோட்டார் அமைத்து இரு தினங்களுக்குள் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.


Tuesday, June 5, 2018

பேராவூரணியில் நாளை மின்தடை 07.06.2018

பேராவூரணியில் நாளை மின்தடை 07.06.2018

மின்வாரிய மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஜூன் 7 ஆம் தேதி (வியாழக்கிழமை) பேராவூரணி, சேதுபாவாசத்திரம், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, கள்ளம்பட்டி, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக்கொல்லைகாடு, பெருமகளூர், பூக்கொல்லை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Sunday, June 3, 2018

மறமடக்கி புதிய உதயம் தமிழன் செக்யூரிட்டி சிசிடிவி கேமரா

மறமடக்கி புதிய உதயம் தமிழன் செக்யூரிட்டி சிசிடிவி கேமரா


எங்கள் ஊரில் புதிதாக திறக்கப்பட உள்ள

1. எங்களிடம் கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமரா பொருத்தி தரப்படும். ஒயர் கேமரா மற்றும் வைஃபை கேமரா பொருந்தி தரப்படும்...

2. எங்களிடம் அனைத்து வகையான உலகம் தரம் வாய்ந்த கம்பெனியின் கண்காணிப்பு கேமரா கிடைக்கும்...

3. உங்கள் வீடு மற்றும் அலுவலகம் துல்லியமாக கண்காணிப்பதற்காக சிறந்த அனுபவம் மிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியை கொண்டு கண்காணிப்பு கேமரா பொருத்தி தரப்படும்...

4. ஒர் ஆண்டு வாரண்டி..

5. எங்களிடம் தவனை வசதிகள் உண்டு...

6. மிக தரமான பொருட்களை மட்டும் பயன்படுத்துகிறோம்...

தொலைபேசி : CK Karthi 9843437423

Saturday, June 2, 2018

பேராவூரணி தபால் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட கோரிக்கை

பேராவூரணி தபால் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட கோரிக்கை


பேராவூரணியில் உள்ள தபால் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டத்தில் கடைக்கோடி தாலுகாவாகும். இது சட்டமன்ற தொகுதியாகவும் உள்ளது. பேராவூரணி பேரூராட்சி பகுதியில் ஏறத்தாழ 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கும், பல்வேறு அரசுத்துறை வேலைகளுக்கு விண்ணப்பி க்கவும், தபால் நிலைய வங்கி சேவைகளுக்கும் பயனுள்ளதாக இருப்பதால், பெரும்பா லோர், நம்பிக்கையான அரசின் தபால்துறை யையே நாடி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை சாலை யில், பேரா வூரணி தபால்நிலையம் வாடகை கட்டிடத்தின் மாடியில் இயங்கி வருகிறது. மேலும் தபால்நிலையம் இருக்கும் இடம் வெளியில் தெரியும் வகையில் பார்வையாக இல்லாமல் உள்ளது. மேலும் வயதானோர், நோய் வாய்ப்பட்டோர் மாடிக்கு ஏறிச் செல்வதில் கடும் சிரமம் உள்ளது. தபால் நிலையம் கட்டுவதற்கு என சேது சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளி அருகில் பல ஆண்டுகளுக்கு முன்பு இடம் வாங்கப்பட்டதாகவும், அந்த இடத்தில் சொந்த கட்டிடத்தில் தபால்நிலையம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி முன்னாள் கவு ன்சிலர் டாக்டர் மு.சீனிவாசன் கூறுகையில், " பல வருடங்களுக்கு முன்பு தபால் நிலையம் கட்டுவதற்காக வாங்கப்பட்ட இடம், கருவேல மரக்கா டாக மாறிக் கிடக்கிறது. இந்த இடத்தில் புதிதாக தபால்நிலையம் அமை க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வே ண்டும். தபால்துறை அதிகா ரிகளை பலமுறை நேரில் அணுகியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த இடத்திற்கான ஆவ ணங்கள், உரிய விபரங்கள் கிடைத்தால் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலமாகவோ, வேறு வகையிலோ கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யலாம். ஆனால் தபால்துறை அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படுகின்றனர்" என்றார்.



நன்றி:தீக்கதிர்
தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பு.

தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பு.

தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளவாறு, 8 சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் காணப்படும் குறைகளை களையவும் தகுதியுடைய விடுபட்ட வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்ய தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை வீடு, வீடாக சென்று கள ஆய்வுபணி மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டத்திலுள்ள 2175 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் வாக்காளர்களின் விபரங்கள் அடங்கிய பதிவேடு அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது. அவர்்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வாக்காளர் பட்டியலில் அனைவரது பெயர்களும் விடுபடாமல் சரியாக இடம்பெற்றுள்ளதா என்பதையும் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் வெவ்வேறு இடங்களில் இல்லாமல் ஒரே பாகத்தில் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக இடம்பெற்றுள்ளதா என்பதையும் சரிபார்க்கும் பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்கு வாக்கு சாவடி நிலை அலுவலர் வருகைதரும்போது திருத்தம் மேற்கொள்ளவேண்டியிருந்தால் அதனை சரி செய்து கொள்ளலாம். மேலும் 1-1-2018-ஐ தகுதி நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இத்தொடர் திருத்தப்பணியில் 18வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் அதாவது 2-1-2000-க்கு முன்னர் பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட விண்ணப்பிக்கலாம்.

மேலும் இது தொடர்பாக விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமே அளிக்கலாம். இக்கள ஆய்வு பணியானது வருகிற 20-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.

வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மீது தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்உரிய ஒப்பளிப்பு ஆணை பிறப்பித்த பின்னர் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர் இடம் பெறும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட பின்னர் அருகில் உள்ள இசேவை மையம் மூலம் வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இணையதளம் மூலமும் வாக்காளர் பெயர் சேர்க்கலாம். இணையதள முகவரி : http://elections.tn.gov.in/


நன்றி:தினத்தந்தி

Friday, June 1, 2018

பேராவூரணி அரசு கல்லூரியில் ஜூன் 4ல் மாணவர் சேர்க்கை.

பேராவூரணி அரசு கல்லூரியில் ஜூன் 4ல் மாணவர் சேர்க்கை.

பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியின்(இருப்பு- முடச்சிக்காடு) புதிய முதல்வராக வெ.செந்தமிழ் செல்வி பொறுப்பேற்றுக் கொண்டார்.இதன்பின் கல்லூரி முதல்வர் வெ.செந்தமிழ் செல்வி கூறுகையில், “வரும் ஜூன் 4-ம் தேதி காலை 11 மணிக்கு முதல் கட்டமாக அனைத்து பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும். அன்றைய தினமே இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும். கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவியர் மதிப்பெண் பட்டியல், சாதி சான்று, மாற்றுச் சான்றிதழுடன் வர வேண்டும். தேர்வு செய்யப்படுவோர் கல்லூரி கல்விக் கட்டணத்தை செலுத்த தயாராக வர வேண்டும். அரசு விதிமுறைப்படி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும்” என்றார்.புதிய கல்லூரி முதல்வரை, பேராசிரியர்கள் ராணி, பழனிவேலு, மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர் சாமிநாதன், மாணவ, மாணவிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பேராவூரணி அடுத்த ஆவணத்தில் இன்று மாநில பூப்பந்தாட்ட போட்டி.

பேராவூரணி அடுத்த ஆவணத்தில் இன்று மாநில பூப்பந்தாட்ட போட்டி.

பேராவூரணி அடுத்த ஆவணத்தில் ஆண்களுக்கான மாநில அளவிலான ஐவர் பூப்பந்தாட்டப் போட்டி ஜூன் 2, 3-ம் தேதிகளில் நடைபெறுகிறது. தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் சார்பில் நடத்தப்படும் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.30ஆயிரம், 2-ம் பரிசு ரூ.25ஆயிரம், 3-ம் பரிசு ரூ.20 ஆயிரம், 4-ம் பரிசு ரூ.15 ஆயிரம் மற்றும் ஐந்து சிறந்த ஆட்டக்காரர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படுகிறது. போட்டி ஏற்பாடுகளை ஆவணம் முத்தமிழ் பூப்பந்தாட்ட கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
பேராவூரணி அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் பரிசோதனை
முகாம்.

பேராவூரணி அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் பரிசோதனை முகாம்.

பேராவூரணி  அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் வி.சௌந்தரராஜன் தலைமையில் புதன்கிழமை கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. கண் பரிசோதகர் திரவியம் கண் நோயாளிகளை பரிசோதனை செய்தார். முகாமில் 67 நபர்கள் சிகிச்சை பெற்றனர். இதில் 25 நபர்களுக்கு கண்புரை இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டு, நவீன பேக்கோ முறையிலான கண் அறுவை சிகிச்சைக்கு தஞ்சாவூர் அரசு இராஜா மிராசுதார் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புற நோயாளிகளுக்கு கண் சொட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் மருந்தாளுநர் சரவணன், செவிலியர்கள் அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.