பேராவூரணி ஒன்றிய பகுதிகளில் மழை, வெள்ள முன்னேற்பாடு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை ஆர்டிஓ கோவிந்தராசு ஆய்வு செய்தார்.
பேராவூரணி ஒன்றியத்தில் மழை, வெள்ள முன்னேற்பாடு ஆய்வு.
பேராவூரணி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள ஆவணத்தில் மழை வெள்ள முன்னேற்பாடு கூட்டம் நடந்தது. இதில் மழை, வெள்ள முன்னேற்பாடு, காய்ச்சல் தடுப்பு பணிகளை ஆர்டிஓ கோவிந்தராசு கேட்டறிந்தார். தாசில்தார்கள் பேராவூரணி பாஸ்கர், பட்டுக்கோட்டை ரகுராமன், வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவடிவேல் பங்கேற்றனர்.
இதைதொடர்ந்து ஆவணம் கடைத்தெருவில் சுகாதார பணிகள் குறித்து ஆர்டிஓ கோவிந்தராசு ஆய்வு செய்தார். அப்போது பட்டுக்கோட்டை சாலையில் உள்ள வடிகால் வாய்க்கால் அடைப்பை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் உணவக உரிமையாளர்கள் மற்றும் மளிகை கடை, பெட்டிக்கடைக்காரர்களிடம் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து சுகாதாரக்கேடு விளைவிக்கும் உணவகங்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்க வட்டார மருத்துவ அலுவலருக்கு அறிவுறுத்தினார். பின்னர் திருச்சிற்றம் பலத்தில் உள்ள அரசு மாணவவிடுதிக்கு சென்று வழங்கப்படும் உணவின்தரம் குறித்து ஆய்வு செய்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் தவமணி, கருப்பசாமி, அமுதவாணன், பிரதாப்சிங் உடனிருந்தனர்.
நன்றி:தினகரன்
0 coment rios: