அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.
கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வங்க கடலில் இலங்கைக்கு அருகே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இலங்கை மற்றும் தென் தமிழகத்தை ஒட்டிய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருப்பதாக கூறினார். இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்தார். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், அவ்வப்போது கனத்த அல்லது மிக கனத்த மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
0 coment rios: