வங்க கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு.
வங்க கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வடகிழக்கு பருவமழை காரணமாக வடக்கு மற்றும் தென்மாவட்டங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறினார். சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இடைவெளி விட்டு மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
0 coment rios: