பேராவூரணியில் மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
தமிழகத்தில் இந்த ஆண்டு 89 சதவீதம் முதல் 110 சதவீதம் வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக 2 நாட்கள் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது.
பேராவூரணி நேற்று காலை முதல் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசியது. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். வாரத்தின் முதல் நாளில் பெய்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பேராவூரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்தமழை பெய்தது. மழையின் காரணமாக பேராவூரணி உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
0 coment rios: