பேராவூரணியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
கனமழை காரணமாக தமிழகத்தில் 9 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல இடங்களில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, புதுவை, காரைக்கால், திருவாரூர், மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடபட்டுள்ளது. கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து பேராவூரணியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
0 coment rios: