காரைக்குடி - திருவாரூர் ரயில் பாதை திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பட்டுக்கோட்டை கிளை மாநாடுபுதன்கிழமை எல்ஐசி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளைத் தலைவர் சம்பத் தலைமை வகித் தார். பொதுமக்களை வாட்டிவதைக்கும் ஜிஎஸ்டி வரிசட்டத்தை திரும்பப் பெறவேண்டும். சமீப காலமாகமதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் கட்டவிழ்த்து விடப்படும் மோதல்களும், சிறுபான்மையினர், தலித்துகளுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களையும் மாநாடு கண்டிக்கிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான போக்கை மாநாடு கண் டிக்கிறது. நான்கு ஆண்டுகளாக தாமதமாகி வரும் காரைக்குடி - திருவாரூர் அகலரயில்பாதை பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தமிழகத்தை பாலைவனமாக் கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷேல்கேஸ் திட்டங்களை கைவிடவேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 coment rios: