வரலாற்றில் இன்று ஆகஸ்டு 06.
ஆகஸ்டு 6 (August 6) கிரிகோரியன் ஆண்டின் 218 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 219 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 147 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1661 – போர்த்துக்கல்லுக்கும் டச்சுக் குடியரசுக்கும் இடையில் டச்சு பிரேசில் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.
1806 – கடைசி புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரான்சிஸ் நெப்போலியனுடனான போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அப்பேரரசு முடிவுக்கு வந்தது.
1825 – பொலிவியா ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது.
1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனியின் 10 கடற்படை படகுகள் பிரித்தானியப் படகுகளைத் தாக்கவென வட கடலை நோக்கிப் புறப்பட்டன.
1914 – முதலாம் உலகப் போர்: சேர்பியா ஜேர்மனி மீதும் ஆஸ்திரியா ரஷ்யா மீதும் போரை அறிவித்தன.
1930 – வீரகேசரி நாளிதழ் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் கொழும்பில் தொடங்கப்பட்டது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா சின்னப் பையன் என்ற பெயரைக் கொண்ட அணுகுண்ட்டை வீசியது. கிட்டத்தட்ட 70,000 பொதுமக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இதன் தாக்கத்தினால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தனர்.
1952 – இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனைக்கு இடம் மாறியது.
1960 – கியூபா புரட்சி: அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்ததை அடுத்து கியூபா தனது நாட்டில் இருந்த அமெரிக்க மற்றும் வெளிநாட்டு மூலதனங்களை நாட்டுடமை ஆக்கியது.
1961 – வஸ்தோக் 2: முதன்முதலாக ஒரு முழு நாள் மனிதன் விண்வெளியில் இருந்த பெருமையை சோவியத் விண்வெளிவீரர் கேர்மொன் டீட்டொவ் பெற்றார்.
1962 – ஜமெய்க்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1964 – அமெரிக்காவில் நெவாடா மாநிலத்தில் உலகின் மிகப் பழமையான மரமாகக் கருதப்பட்ட 4900 ஆண்டு பழமையான புரொமேத்தியஸ் என்ற மரம் வெட்டப்பட்டது.
1990 – இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் இடத்தில் பெண்கள், முதியவர்கள் உட்பட 47 தமிழர்கள் இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
1991 – உலகளாவிய வலை (WWW) தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ்-லீ வெளியிட்டார்.
1996 – செவ்வாயில் இருந்து தோன்றியதாகக் கருதப்படும் ஏ.எல்.எச் 84001 என்ற விண்கல் ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய தகவலைக் கொண்டிருப்பதாக நாசா அறிவித்தது.
1997 – வட கொரிய போயிங் விமானம் ஒன்று குவாமில் வீழ்ந்ததில் 228 பேர் கொல்லப்பட்டனர்.
2002 – தமிழ்நாடு ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 11 பேர் பெண்கள் உட்பட 28 மன நோயாளிகள் தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.
2006 – திருகோணமலையில் நோயாளரை ஏற்றி வந்த ஆம்பியூலன்ஸ் வண்டி எறிகணைத் தாக்குதலுக்குள்ளானதில் ஒரு நோயாளி கொல்லப்பட்டார்.
பிறப்புக்கள்
1881 – அலெக்சாண்டர் பிளெமிங், நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் (இ. 1955)
1970 – எம். நைட் ஷியாமளன், ஹாலிவுட் இயக்குனர்
இறப்புகள்
1978 – திருத்தந்தை ஆறாம் பவுல் (பி. 1897)
2009 – முரளி, மலையாள நடிகர் (பி. 1954)
சிறப்பு நாள்
பொலீவியா – விடுதலை நாள் (1825)
ஜமெய்க்கா – விடுதலை நாள் (1962)
ஜப்பான் – டோரோ நாகாஷி – ஹிரோஷிமா அணுகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நினைவு நாள்.
S
0 coment rios: