பேராவூரணி காவல் நிலையம் அருகே ஆதனூர் வழியாக நெல்லடிக்காடு, ரெட்ட வயல் வழியாக ஆவுடையார் கோவில் செல்லும் மெயின் சாலையில் காவல் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் ரயில்வே சாலை மெயின் சாலையின் குறுக்கே செல்கிறது. ரயில்வே துறையினர் அகல ரயில் பாதை அமைப்பதற்கான பணிகளை செய்து வரும்போது மெயின் சாலையை விட ரயில்வே சாலை சுமார் 10 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதனால் ரயில்வே சாலையை கடக்கும் இடம் செங்குத்தான நிலையில் ஏறி இறங்க வேண்டிய சூழ்நிலையில் 25க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் இந்த வழியாக தான் பேராவூரணி நகருக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர் . மேலும் ஒரு பக்கத்திலிருந்து வாகனம் ஏறும் போது எதிரே வரும் வாகனம் தெரியாமல் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் அபாயம் உள்ளது. இல்லை என்றால் பின்னால் வாகனத்தை எடுக்கும் போது பிரேக் பிடிக்க முடியாமல் பின்னால் செல்லும் வாகனங்களில் ஏறி சேதங்கள் அதிகம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. ஒரு நாளைக்கு குறைந்தது 10 வாகனத்தில் செல்பவர்களாவது விழுந்து எழும் சூழ்நிலையில் உள்ளனர்.மேலும் விவசாயிகள் விவசாயம் செய்த காய்கறி, மற்றும் நவதானியங்களை விற்பனை செய்ய கொண்டு செல்லும்போது செங்குத்தான பாதையில் ஏறி செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விவசாயிகள் சைக்கிள் மூலம் விளைப்பொருட்களை கொண்டுச் செல்ல சம்பளத்திற்கு ஆள் கூட்டிச் செல்லும் சூழ்நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் எனவே தாங்கள் இந்த மனுவை ஏற்று சாலையை அகலப்படுத்தியும், எதிரே வரும் வாகனம் தெரியும் அளவிற்கு மெயின் சாலையை உயர்த்தியும் தந்து பொது மக்களின் கஷ்டம் போக்க வேண்டும் என மக்கள் சட்ட உரிமைகள் கழக மாவட்ட செயலாளர்வேத .குஞ்சருளன் கோரிக்கை வைத்திருந்தார். இதன் செய்தி வணக்கம் இந்தியா நாளிதழில் மே 25ம் தேதி வெளிவந்தது. இதனையடுத்து உடனடியாக குளத்து மண்ணை கொண்டு சாலையை சம்மந்தப்பட்ட ரயில்வே ஒப்பந்தகாரர்கள் சாலையை சரி செய்தனர். தற்போது மழை பெய்துள்ளதால் குளத்து மண் வழுக்கும் சூழ்நிலை ஏற்பட்டு பேராவூரணியிலிருந்து ஆவுடையார்கோவில் செல்லும் அரசு பேருந்து அந்த சாலையில் செல்லும்போது வழுக்கி பக்கவாட்டில் இருந்த தனியார் அரிசிஆலை தடுப்பு சுவரில் மோதி நின்றது என்பது குறிப்பிடதக்கது. மேலும் இருசக்கர வாகனங்களில் இந்த சாலையில் செல்வோர் விழுந்து எழும் சூழலில் உள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இந்த சாலையில் உள்ள குளத்துமண்மீது கிராவல் அடித்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு வழிவகை செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
Wednesday, August 2, 2017
Author: Unknown
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: