Wednesday, August 2, 2017

வரலாற்றில் இன்று ஆகஸ்டு 02.

ஆகஸ்டு 2 (August 2) கிரிகோரியன் ஆண்டின் 214 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 215 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 151 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1610 – ஹென்றி ஹட்சன் தனது கடற் பயணத்தின் போது இன்றைய ஹட்சன் குடாவை அடைந்தார்.
1790 – ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
1798 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: நைல் நதிப் போரில் பிரித்தானியா வெற்றி பெற்றது.
1870 – உலகின் முதலாவது சுரங்க தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.
1903 – ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக மசிடோனியர்களின் கிளர்ச்சி தோல்வியில் முடிந்தது.
1914 – ஜேர்மனியப் படையினர் லக்சம்பேர்கை முற்றுகையிட்டன.
1916 – முதலாம் உலகப் போர்: லியனார்டோ டாவ்வின்சி என்ற இத்தாலியப் போர்க்கப்பல் ஆஸ்திரியாவினால் மூழ்கடிக்கப்பட்டது.
1918 – முதலாம் உலகப் போரை அடுத்து சைபீரியாவுக்கு தனது படைகளை அனுப்பப்போவதாக ஜப்பான் அறிவித்தது.
1931 – இராணுவ வேலைகளை நிராகரிக்குமாறு அறிவியலாளர்களுக்கு ஐன்ஸ்டைன் அழைப்பு விடுத்தார்.
1932 – பொசித்திரன் (இலத்திரனின் எதிர்த்துணிக்கை) கார்ல் ஆண்டர்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1934 – அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார் (Führer).
1939 – அணு ஆயுதத்தை தயாரிக்க அறிவுறுத்துமாறு ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டிற்குக் கடிதம் எழுதினார்கள்.
1943 – போலந்தில் திரெபிலிங்கா வதை முகாமில் நாசிகளுக்கு எதிராகக் கிளர்ச்சி இடம்பெற்றது.
1945 – இரண்டாம் உலகப் போர்: தோல்வியடைந்த ஜேர்மனியின் எதிர்காலம் குறித்து விவாதித்த நட்பு அணி நாடுகளின் பொட்ஸ்டாம் மாநாடு நிறைவடைந்தது.
1968 – பிலிப்பீன்சில் கசிகுரான் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி 270 பேர் உயிரிழந்தனர்.
1973 – மான் தீவில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 51 பேர் கொல்லப்பட்டனர்.
1980 – இத்தாலியில் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டனர்.
1989 – யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
1990 – ஈராக் குவைத்தின் மீது படையெடுத்தது.
1994 – பலாலி இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியதில் உலங்கு வானூர்தி, கவச வண்டி தாக்கியழிக்கப்பட்டன.
2006 – திருகோணமலை மாவட்டத்தில் மகிந்தபுர, கிளிவெட்டி, பாலதோப்பு, பச்சனூர் இராணுவமுகாம்களைத் தாக்கி மூதூர் இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் புலிகள் உள்நுளைந்தனர்.

பிறப்புகள்

1859 – ஆபிரகாம் பண்டிதர், தமிழிசைக் கலைஞர் (இ. 1919)
1876 – பிங்கலி வெங்கையா, இந்திய நிலவியலாளர், இந்திய தேசியக் கொடியை வரைந்தவர் ரி. 1963)
1913 – சேவியர் தனிநாயகம், இலங்கைத் தமிழறிஞர், கல்விமான் (இ. 1980)
1926 – ஜோர்ஜ் ஹப்பாஷ், பாலஸ்தீனத் தலைவர் (இ. 2008)
1930 – ஏ. பி. வெங்கடேசுவரன், இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலர் (இ. 2014)
1932 – பீட்டர் ஓ டூல், பிரித்தானிய-ஐரிய நடிகர் (இ. 2013)
1941 – சூல்ஸ் ஹொஃப்மன், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு-லக்சம்பர்க் உயிரியலாளர்
1945 – பங்கர் ராய், இந்திய ஆர்வலர், கல்வியியலாளர்
1958 – அர்சாத் அயூப், இந்தியத் துடுப்பாளர்
1964 – மேரி லூயீஸ் பார்க்கர், அமெரிக்க நடிகை
1976 – சாம் வோர்திங்டன், ஆங்கில-ஆத்திரேலிய நடிகர்
1976 – முகம்மது சியாத், பாக்கித்தானியத் துடுப்பாளர்

இறப்புகள்

686 – ஐந்தாம் யோவான் (திருத்தந்தை) (பி. 635)
1860 – ஹென்றி வோர்ட், இலங்கையின் முன்னாள் பிரித்தானிய ஆளுநர் (பி. 1796)
1922 – அலெக்சாண்டர் கிரகாம் பெல், தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் (பி. 1847)
1976 – பிரிட்ஸ் லாங், ஆத்திரிய-அமெரிக்க திரைப்பட இயக்குனர் (பி. 1890)
2000 – நாஞ்சில் கி. மனோகரன், தமிழக அரசியல்வாதி (பி. 1929
2013 – வெ. தட்சிணாமூர்த்தி, இந்தியப் பாடகர்-கவிஞர் (பி. 1919)

சிறப்பு நாள்

உலக நட்பு தினம்

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: