Tuesday, January 31, 2017
காளியம்மன் கோவில் முன்பு முழங்காலிட்டு வணங்கும் காளை.
by Unknown
ரொம்ப நாளாக நடந்த ஜல்லிக்கட்டு பிரச்சினை ஒருவழியாக முடிவுக்கு வந்தாச்சு, இனிமே களத்துல இறங்கி நம்மள பிடிக்க வருவோரை பந்தாடவேண்டியதுதான். தடை நீங்கியதற்கு சாமிக்கு நன்றி என முழங்காலிட்டு நன்றி தெரிவிக்கின்றதோ. இந்த காளை. திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவர் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை, காளியம்மன் கோவில் முன்பு முழங்காலிட்டு வணங்கும் காட்சியை படத்தில் காணலாம்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை உடனே அகற்ற வேண்டும் தஞ்சை கலெக்டர் உத்தரவு
by Unknown
Monday, January 30, 2017
பிப்ரவரி 1 முதல் ஏடிஎம்-மில் பணம் எடுக்க வரம்பு இல்லை.
by Unknown
பிப்ரவரி 1 முதல் ஏடிஎம்-மில் பணம் எடுக்க வரம்பு இல்லை.
அந்தந்த வங்கிகளே வரம்பு அளவை நிர்ணயித்துக் கொள்ளலாம். நவ.8 ஆம் தேதி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு. நடப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் நீக்கம் - ரிசர்வ் வங்கி. வங்கிகளில் நேரடியாக பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் - ரிசர்வ் வங்கி.
Sunday, January 29, 2017
பேராவூரணி அடுத்த ஆதனூர் மாபெரும் சுழற்கோப்பைக்கான சிறுவர் கபாடி போட்டி 10-02-2017 வெள்ளிக்கிழமை.
by Unknown
இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹10,001 பரிசும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹8,001 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹6,001 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹5,001 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது. மேலும் இப்போட்டியில் பங்கேற்க 52+3 கிலோ எடைகொண்ட சிறுவர் அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹250 நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும்.
மேலும் தொடர்புக்கு : +91 9566695775 +91 9965455770 +91 9750731566
பேராவூரணி அடுத்த புனல்வாசல் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் தஞ்சாவூர் ஆட்சியர் ஆய்வு.
by Unknown
பேராவூரணி அடுத்த புனல்வாசல் கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா நடத்த கிராம கமிட்டியினர் முடிவு செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து விழா நடத்துவது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் விழா கமிட்டியினர் முறைப்படி விண்ணப்பித்தனர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு விழாவை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள புனல்வாசல் முத்துமாரியம்மன் கோவில் வளாக இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை சனிக்கிழமை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியருடன் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ், பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்மேனன், ஏ.டி.எஸ்.பி கண்ணன், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. கோவிந்தராஜ், தாசில்தார் ரவிச்சந்திரன், பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சௌந்தரராஜன் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் இடத்தை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ள தேதியை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்து விரைவில் அறிவிப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி:தீக்கதிர்