பேராவூரணி அடுத்த புனல்வாசலில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் சவரிமுத்து தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் செபஸ்தியர், வேதமணி, ஆல்பர்ட் அந்தோணிசாமி, ஆரோக்கியசாமி, பிலோமின்மேரி, ரெஜினாமேரி, சிமியோன், ராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
பேராவூரணியில் தேங்காய் உற்பத்தி விரிவாக்க மையம் அமைக்க வேண்டும். தமிழக அரசு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மூலம் நெல் கொள்முதல் செய்வதுபோல, பேராவூரணியில் தேங்காய் உற்பத்தி விரிவாக்க மையத்தை ஏற்படுத்தி கேரளாவை போல் உரித்தேங்காயாகவும், மட்டை நீக்கிய தேங்காய் குவிண்டாலுக்கு ரூ.16 ஆயிரத்திற்கும், கொப்பரை குவிண்டால் ரூ.
24 ஆயிரத்திற்கும் அரசே கொள்முதல் செய்து தென்னை விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.
பல ஆண்டுகளாக ஜுன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி நின்றுபோன நிலையில் ஒருபோக சாகுபடிக்கும் காவிரி தண்ணீர் கிடைக்காமல் பெருத்த வருவாய் இழப்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளதால், கூட்டுறவு சங்கங்களிலும் மற்ற வங்கிகளிலும் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகள் வேளாண்மைதுறை இயக்குனருக்கும், தஞ்சை மாவட்ட கலெக்டருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
நன்றி : தினகரன்
0 coment rios: