பேராவூரணி தாலுகா எடுத்தாணிவயல் கிராமத்தில் முதல் முறையாக நேரடி நெல் விதைப்பு பணி துவங்கப்பட்டுள்ளது. சம்பா தொகுப்பு திட்டத்தின்கீழ் நேரடி நெல் விதைப்பு பணியை விவசாயி குமார் என்பவரது வயலில் கலெக்டர் அண்ணாத்துரை துவக்கி வைத்தார். இதைதொடர்ந்து வேளாண் உதவி இயக்குநர் ஈஸ்வர் கூறும்போது, பேராவூரணி வட்டாரத்தில் 3,259 ஏக்கரில் நேரடி நெல் விதைப்புக்கான உழவுப்பணி முடிந்துள்ளது. 25 டன் சான்று விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 20 டன் சான்று பெற்ற மத்தியகால ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சிங்க் சல்பேட் 82 ஏக்கர், களைக்கொல்லி 112 ஏக்கரில் இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பு செய்ததற்கு 130 ஏக்கர் பரப்பளவுக்கு இதுவரை மானியம் வேண்டி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பு 140 ஏக்கர், இயந்திர நெல் நடவு 200 ஏக்கரிலும் முடிந்துள்ளது. குறிச்சி, ஆவணம், செங்கமங்கலம், ரங்கநாயகிபுரம், பஞ்சநதிபுரம், புனல்வாசல், ஒட்டங்காடு ஆகிய கிராமங்களில் 600 ஏக்கருக்கு இயந்திர நடவுக்கான பாய் நாற்றங்கால் தயார் நிலையில் உள்ளது என்றார
0 coment rios: