மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் மூலம் எந்தெந்த டெல்டா மாவட்டங்கள் பயன்பெறுகின்றன என்பதை பார்க்கலாம்.
கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரானது ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. டெல்டா மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக திகழும் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரானது சேலத்திலிருந்து ஈரோடு, நாமக்கல் வழியாக கரூரை சென்றடைகிறது. சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் கால்வாய் பாசனத்தின் வாயிலாக சுமார் 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. தொடர்ந்து, கரூர், திருச்சி வழியாக கல்லணையை சென்றடைகிறது.
மேட்டூர் அணையில் வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறந்தால் அந்த தண்ணீரானது அடுத்த மூன்று நாட்களில் கல்லணைக்கு வந்து சேரும். அங்கிருந்து, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் கடைமடை பகுதியான நாகப்பட்டினம் சென்றடைகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரானது ஒரு வாரத்திலிருந்து பத்து நாட்களுக்குள்ளாக கடைமடை பகுதியான நாகையை சென்றடையும்.
0 coment rios: