Thursday, September 8, 2016

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தகுதிகள் ..



தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் கமி‌ஷன் ஏற்பாடு செய்து வருகிறது.

அக்டோபர் 17 மற்றும் 19-ந்தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பாக தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கும். அதன் பிறகு தேர்தல் கமி‌ஷன் தேர்தல் அட்ட வணை வெளியிடும்.

இதற்கிடையே ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தகுதிகள், கட்டுப்பாடுகள், மனுதாக்கல் போன்ற அனைத்து விவரங்களையும் தேர்தல் கமி‌ஷன் கையேடாக அச்சடித்து நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஊராட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நான்கு வகை வாய்ப்புகள் உள்ளன. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களில் ஏதாவது ஒன்றில் போட்டியிடலாம்.

ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்கள் ஆகிய ஒவவொரு பிரிவிலும், ஒவ்வொரு பதவியிலும் குறிப்பிட்ட விகிதத்தில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை குறித்த விவரங்கள் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலரால் வெளியிடப்படும்.

நடப்பு சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரும் அப்பகுதிக்கு தொடர்புடைய கிராம ஊராட்சி வார்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற தகுதியுடையவராவார்.

எந்த ஊராட்சி அமைப்பின் உறுப்பினராக அல்லது தலைவராக போட்டியிட விரும்புகின்றீர்களோ, அந்த ஊராட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு போட்டியிட்டால், உங்கள் பெயர் தொடர்புடைய ஊராட்சி ஒன்றியத்தின் வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு வார்டிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு போட்டியிட்டால், அந்த மாவட்ட ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு வார்டிலாவது பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

ஒதுக்கீடு செய்யப்பட்ட தலைவர் பதவியிடத்திற்கோ அல்லது உறுப்பினர் பதவியிடத்திற்கோ போட்டியிட்டால் அந்த பதவியிடம் எந்த பிரிவினருக்கு (வகுப்பினர் அல்லது பெண்கள்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோ அந்த பிரிவினைச் சார்ந்தவராகவோ அல்லது அந்த வகுப்பினைச் சார்ந்தவராகவோ அல்லது அப்பிரிவின் பெண்ணாகவோ இருத்தல் வேண்டும்.

தேர்தலில் போட்டியிடுவோர் உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்த அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ அல்லது அரசு சார்புடைய நிறுவன பணியாளராகவோ அல்லது அலுவலராகவோ அல்லது மத்திய, மாநில அரசு அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ இருக்கக் கூடாது.

இந்திய அரசில் அல்லது ஏதேனும் மாநில அரசில் பதவி வகித்திருந்து லஞ்சம் அல்லது அரசுக்கு துரோகம் இழைத்ததற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.

1955-ம் ஆண்டு குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற வராக இருக்கக் கூடாது.

மேலும், வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளன்று 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 37 (1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு சட்டங்களின் கீழ், ஒருவர் நீதிமன்றத்தால் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டிருப்பின் அத்தகைய தண்டனை தீர்ப்பானது அபராதம் மட்டுமிருப்பின் - குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு வருட காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.

அந்த தீர்ப்பு சிறை தண்டனையாக இருப்பின், தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்தும் மற்றும் சிறைத் தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து தகுதியற்றவர் ஆவார்.

இது தவிர வேறு ஏதேனும் குற்ற செயலுக்காக குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு குறைவான சிறைத் தண்டனை அடைந்தவர், அவ்வாறு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து மற்றும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தகுதியற்றவர் ஆவார்.

பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியிருனருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியிடங்களில் அவ்வகுப்பைச் சாராதவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மேற்படி சட்டப்பிரிவு 38 (3) இ-ன்கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் அவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு போட்டியிடத் தகுதியற்றவர் ஆவார்.

மனநலம் குன்றியவராக இருக்கக் கூடாது.

பெற்ற கடனை தீர்க்க வகையற்றவர் என மனு செய்துள்ளவராகவோ அல்லது உரிய நீதிமன்றத்தில் அவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பவராகவோ இருக்கக் கூடாது.

நீங்கள் எந்த ஊராட்சியில் உறுப்பினராக அல்லது தலைவராகப் போட்டியிட விர

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: