தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள சேதுபாவாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட்( டி-1203 ) ல் ரூ.67 லட்சம் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந் துள்ளது. இதையடுத்து வங்கியை பொதுமக்கள், விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டுவருகிறது. வங்கியின் தலைவராக செல்வக்கிளி, துணைத்தலைவராக மணிமாறன், செயலாளராக செல்வராசு, உதவியாளராக பெத்தபெருமாள் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது தமிழக அரசு விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடனைத் தள்ளுபடி செய்தது.
இதில் தகுதியுள்ள விவசாயிகளைக் கண்டறிந்து கடன் தள்ளுபடியை நடைமுறைப்
படுத்தியும் அதில் பயன் பெற்ற விவசாயிகளின் பட்டியலை கடந்த 26.08.2016-ல் இருந்து 2.09.2016-க்குள் அந்தந்த கூட்டுறவு வங்கிகளின் அலுவலகம் முன்பாக பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான கூட்டுறவு வங்கிகளில் பெயர்ப்பலகை வைக்கப்படவில்லை. அதே போல் சேதுபாவாசத்திரம் கூட்டுறவு வங்கியிலும் பெயர்ப்பலகை வைக்கப் படவில்லை. விவசாயிகள் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் செயல்படுத்தப்படாததால் விவசாயிகள் மத்தியில் சந்தேகம் ஏற்பட் டுள்ளது.
இவ்வங்கியில் பெருமளவில் மோசடி நடைபெற்றுள்ளதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் விவசாயிகள் சிலர் ஆராய் ந்து பார்த்த போது, அந்த வங்கியில் டிராக்டர் கடன் இதுவரை வழங்கியது கிடையாது. ஆனால் இரண்டு நபர்கள் டிராக்டர் கடன் பெற்றுள்ளதாகவும், அது தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகவும் தெரியவந்தது.
இதேபோல் பொய்யான பெயர்களில் இறந்தவர்கள், ஊரிலேயே இல்லாதவர்கள், ஊரில் உள்ள
வர்களின் சிலரது ஆவணங்களை அவர்களுக்கே தெரியாமல் போலியாக தயார் செய்தும் 85 பயனாளிகள் பட்டியல் போலியாக தயார் செய்யப்பட்டு 67 லட்சத்து 46 ஆயிரத்து 582 ரூபாய் அளவில் மோசடிநடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை அன்று மரக்காவலசை, சேதுபாவாசத்திரம், ராவுத்தன் வயல் ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு மோசடி செய்த அதிகாரியைக் கைது செய்ய வேண்டும்; பல கோடி ரூபாய்க்கு நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. நகைகள் அனைத்தும் உள்ளதா என உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு, அதிகாரிகளை வங்கியின் உள்ளே வைத்து கதவை இழுத்து மூடினர்.
இதையடுத்து இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மோசடியில் சிக்கியவர்கள் ஆளுங்கட்சி பிரமுகர்கள் எனத் தெரிகிறது. இதிலிருந்து தப்பிப்பதற்காக ஆளுங்கட்சியின் மாவட்ட மேலிடத்தைச் சந்திக்கும் ஏற்பாடுகளில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாவட்ட
ஆட்சியர் ஆ.அண்ணாதுரை அறிவுறுத்தலின் பேரில் கூட்டுறவு சங்க அதிகாரிகள் வங்கிக்கு சென்று ஆய்வு நடத்தியதாகத் தெரிகிறது. தொடர்ந்து வங்கியை ஆய்வு செய்த அதிகாரி
கள் வங்கியை பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கூட்டுறவு சங்கத் தலைவர் செல்வக்கிளி தலைமறைவானதாகக் கூறப்படுகிறது
நன்றி : தீக்கதிர்
0 coment rios: