பேராவூரணியில் இடியுடன் கூடிய மழை ஒரு மணி நேரம் நீடித்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
பேராவூரணி மற்றும் அதன் சில சுற்றுவட்டார கிராமங்களில் மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களும், விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
பேராவூரணி நகரை மாலை 5.45 மணிக்கு திடீரென சூழ்ந்துகொண்ட கார்மேகமானது மழையை கொண்டுவந்தது.
கனமழையால் பேராவூரணி நகர்புற பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.
பேராவூரணி மழை பெய்ததால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
0 coment rios: