பேராவூரணி குறு வள மைய அளவிலான பள்ளிகளின் மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதில்
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்தல்,
மாணவர்கள் செயல்பாட்டில் பெற்றோர் பங்களிப்பு,
அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,
பள்ளி வளர்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழுவின் பங்களிப்பு போன்றவை குறித்த செய்திகளை வட்டார வள மைய பயிற்றுனர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் குழு உறுப்பினர்களிடம் எடுத்துரைத்தனர். மேலும் பெற்றோர் சார்பில்,
பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் பெற்றோர்-ஆசிரியர் அல்லாதவர்களின் தலையீட்டை பள்ளித் தலைமை ஆசிரியர் தடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. நிகழ்வில் குறு வள மையத்திற்குட்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
0 coment rios: