Friday, March 30, 2018

சேந்தன்குடி ஜெயநகரம் அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் தீர்த்த
திருவிழா-2018.

சேந்தன்குடி ஜெயநகரம் அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் தீர்த்த திருவிழா-2018.

புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி ஜெயநகரம் அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் தீர்த்த திருவிழா-2018.



















நன்றி:Dasan
காரைக்குடி- பட்டுக்கோட்டை பயணிகளுடன் ரயில் சோதனை ஓட்டம்

காரைக்குடி- பட்டுக்கோட்டை பயணிகளுடன் ரயில் சோதனை ஓட்டம்

காரைக்குடி- திருவாரூர் அகல இரயில்பாதை பணிகளுக்காக கடந்த 2012 ஆம் ஆண்டு இப்பகுதியில்இரயில் சேவை நிறுத்தப்பட்டது.5 ஆண்டுகள் ஆன நிலையில் காரைக்குடி- பட்டுக்கோட்டைக்கு இடையே சுமார் 76 கிலோமீட்டர் பணிகள் முழுவதுமாக பூர்த்தியடைந்தன. பட்டுக்கோட்டை- திருவாரூர் வரையிலான அகலப்பாதை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.பணிகள் முடிவடைந்த நிலையில்வெள்ளிக்கிழமையன்று காரைக்குடி-பட்டுக்கோட்டை பாதையில் ஒரு நாள்பயணிகள் ரயில் போக்குவரத்து பரிசோதனை ஓட்டம் நடைபெற்றது.காரைக்குடியில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்ட டிஇஎம்யு பணிகள் ரயில் அறந்தாங்கி வழியாக பேராவூரணிக்கு காலை 11.45 மணிக்கு வந்தடைந்தது. பேராவூரணியில் இரயில் பயணிகள் மற்றும் பிரமுகர்கள் வரவேற்பு அளித்தனர்.

இரண்டு நிமிடம் நின்ற பின்பு புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு 12.40 மணிக்கு சென்றடைந்தது. பின்பு இதே மார்க்கத்தில் பட்டுக்கோட்டையில் மாலை 3 மணிக்குபுறப்பட்டு ஒட்டங்காடு, பேராவூரணி,ஆயிங்குடி, அறந்தாங்கி, வாளரமாணிக்கம், பெரியகோட்டை, கண்டனூர்-புதுவயல் நிறுத்தங்களில் நின்றுமாலை 6 மணிக்கு காரைக்குடி சென்றடைந்தது. 6 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற இரயில் போக்குவரத்து காரணமாக இப்பகுதி மக்கள், வர்த்தகர்கள், மாணவர்கள், இரயில் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வரவேற்பு தெரிவித்தனர்.

ஏராளமான பயணிகள் இரயிலில் பயணம் செய்தனர்.இரயில்வே அதிகாரிகள் தரப்பில்பேசியபோது, “ நேற்று (வெள்ளி) ஒரு நாள் மட்டும் இரயில் பயணிகளோடு சோதனை ஓட்டம் நடக்கிறது. தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்தபின், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் பங்கேற்று முறைப்படி இரயில் சேவையை தொடங்கி வைப்பர். இதற்கான தேதி பிறகு அதிகாரிகளால் அறிவிக்கப்படும்” என்றனர். முதற்கட்டமாக காரைக் குடி - பட்டுக்கோட்டை இடையே ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் பயணிகள் இரயில் சேவை தொடங்கப்பட்டு, இரண்டு இரயில்கள் இயக்கப்படும் எனக் கூறப்படுகிறது.



நன்றி:தீக்கதிர்
பேராவூரணி அடுத்த ஆணைக்காடு பகுதியில் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வுகாண கோரிக்கை.

பேராவூரணி அடுத்த ஆணைக்காடு பகுதியில் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வுகாண கோரிக்கை.

பேராவூரணி அடுத்த ஆனைக்காடு கிராமத்தில் கடந்த 15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேராவூரணி ஒன்றியம் காலகம் ஊராட்சியை சேர்ந்த ஆனைக்காடு கிராமத்தில் 350 குடும்பங்களை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக ஆனைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் ஆழ்குழாய் கிணறுடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 1996ம் ஆண்டு கட்டப்பட்டது. இதைதொடர்து நீர்த்தேக்க தொட்டியிலிருந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் ஆனைக்காடு பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை.
இதுகுறித்து தஞ்சை கலெக்டருக்கு கிராம மக்கள் சார்பில் தமாகா இளைஞரணி வட்டார தலைவர் சிதம்பரம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் ஆனைக்காடு கிராமத்தில் கடந்த 15 நாட்களாக சீரான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பேராவூரணி பகுதியில் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்காவிட்டால் சாலை மறியல்.

பேராவூரணி பகுதியில் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்காவிட்டால் சாலை மறியல்.

பேராவூரணியில் இருந்து ஆதனூர், மணக்காடு, மங்களநாடு, சுப்பிரமணியபுரம், நாகுடி வழியாக ஆவுடையார்கோயில் வரை 2016ம் ஆண்டு பி.96 என்ற வழித்தடத்தில் பேருந்து இயக்கப்பட்டது. நாளொன்றுக்கு 4 முறை இயக்கப்பட்ட இந்த பேருந்து வருமானத்துடன் 7 மாதம் முறையாக இயக்கப்பட்டது. இதனால் 33 கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் வேலைக்கு செல்வோர், மருத்துவமனை செல்வோர் பயனடைந்து வந்தனர். தற்போது இந்த வழித்தடத்தில் தினசரி 2 முறை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது. அதுவும் சில நேரங்களில் இயக்கப்படுவதில்லை. எனவே பி96 வழித்தடத்தை நிரந்தரப்படுத்தி மீண்டும் பழையவாறு 4 முறை இயக்கவும், மேலும் பேராவூரணியில் இருந்து கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், திருவாப்பாடி வழியாக கட்டுமாவடி வரை இயக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ள பேருந்து வழித்தடம் எண்.15 ஐயும் மீண்டும் இயக்க வேண்டும். இந்த 2 பேருந்துகளையும் மீண்டும் ஒரு வாரத்துக்குள் இயக்காவிட்டால் அனைத்து கட்சிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி-பேராவூரணி-பட்டுக்கோட்டை இடையே சிறப்பு ரயில் சேவையின் புகைப்படத்
தொகுப்பு.

காரைக்குடி-பேராவூரணி-பட்டுக்கோட்டை இடையே சிறப்பு ரயில் சேவையின் புகைப்படத் தொகுப்பு.

காரைக்குடி-பேராவூரணி- பட்டுக்கோட்டைஒரு நாள் சிறப்பு ரயில் புகைப்படத் தொகுப்பு.









































Thursday, March 29, 2018

பேராவூரணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலை முறையாக நடத்த
வலியுறுத்தி சாலை மறியல்

பேராவூரணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலை முறையாக நடத்த வலியுறுத்தி சாலை மறியல்

பேராவூரணி அடுத்த காலகம் சத்திரம் என்ற இடத்தில் பட்டுக்கோட்டை- பேராவூரணி சாலையில் புதன்கிழமை மாலை பொதுமக்கள் உள்ளிட்டோர் திடீர் சாலை மறியல். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலை முறையாக நடத்த வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். 


சேந்தன்குடி ஜெயநகரம் அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வைரத்தேர்
திருவிழா-2018

சேந்தன்குடி ஜெயநகரம் அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வைரத்தேர் திருவிழா-2018

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், சேந்தன்குடி ஜெயநகரம் அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வைரத்தேர் திருவிழா-2018.













நன்றி:Dasan

 
பட்டுக்கோட்டை-பேராவூரணி- காரைக்குடி ஒரு நாள் சிறப்பு ரயில்.

பட்டுக்கோட்டை-பேராவூரணி- காரைக்குடி ஒரு நாள் சிறப்பு ரயில்.

பட்டுக்கோட்டை-பேராவூரணி- காரைக்குடி வழித்தடத்தில் மணிக்கு 73.47 கிலோ மீட்டர் வேகத்தில், ஒரு நாள் சிறப்பு ரயில் சேவை நாளை (மார்ச் 30) வெள்ளிக்கிழமை காலை தொடங்க உள்ளது.

காரைக்குடியில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு,
கண்டனூர் புதுவயல் (10.12 - 10.13),
பெரியக்கோட்டை (10.25 - 10.26),
வளரமாணிக்கம் (10.38-10.39),
அறந்தாங்கி (11.03 - 11.05),
ஆயங்குடி (11.18 - 11.19),
பேராவூரணி (11.45 - 11.47),
ஒட்டாங்காடு (12.13 - 12.15) வழியாக மதியம் 1 மணிக்கு பட்டுக்கோட்டை வந்து சேரும்.

பட்டுக்கோட்டையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு
ஒட்டாங்காடு (15.35 - 15.36)
பேராவூரணி (16.00 - 16.02),
ஆயங்குடி (16.30 - 16.31),
அறந்தாங்கி (16.45 - 16.47),
வளரமாணிக்கம் (17.14 - 17.15),
பெரியக்கோட்டை (17.26 - 17.27),
கண்டனூர் புதுவயல் (17.37 - 17.38) வழியாக மாலை 6 மணிக்கு காரைக்குடி வந்து சேரும்.

அறந்தாங்கி, பேராவூரணி, ஓட்டங்காடு ஆகிய ரயில் நிலையங்களில் 2 நிமிடங்கள் இடைவெளியிலும், மீதமுள்ள நிலையங்களில் 1 நிமிடம் மட்டும் ரயில் நின்று செல்லும்.



பேராவூரணி நீலகண்டன் பிள்ளையார் கோயில் சித்திரை திருவிழா முன்னிட்டு குளத்தில் தண்ணீரை
அகற்றம்.

பேராவூரணி நீலகண்டன் பிள்ளையார் கோயில் சித்திரை திருவிழா முன்னிட்டு குளத்தில் தண்ணீரை அகற்றம்.

பேராவூரணி நீலகண்டன் பிள்ளையார் கோயில் சித்திரை திருவிழா முன்னிட்டு குளத்தில் தண்ணீரை அகற்றப்பட்டது.







Wednesday, March 28, 2018