Monday, February 26, 2018

பேராவூரணி அடுத்த குருவிக்கரம்பை விஸ்டம் கைப்பந்து கழகம் நடத்தப்படும் மாநில அளவிலான
கைப்பந்து போட்டி.

பேராவூரணி அடுத்த குருவிக்கரம்பை விஸ்டம் கைப்பந்து கழகம் நடத்தப்படும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி.

பேராவூரணி அடுத்த குருவிக்கரம்பை விஸ்டம் கைப்பந்து கழகம்  நடத்தப்படும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி. இப்போட்டி வருகின்ற 09-03-2018 முதல் 11-03-2018 வரை பகல், இரவாக கைப்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அணியினர் பங்கேற்க உள்ளனர். இப்போட்டி ஆண்கள் பிரிவில் 5 அணியும் மற்றும் பெண்கள் பிரிவில் 4 அணியும் பங்கேற்க உள்ளது.

ஆண்கள் பிரிவில் வெற்றி பெரும் 

முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹40,000 பரிசும்,

இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹30,000 பரிசும்,

மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹25,000 பரிசும்,

நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,000 பரிசும்,

ஐந்தாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,000 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.

பெண்கள் பிரிவில் வெற்றி பெரும் 

முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹25,000 பரிசும்,

இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,000 பரிசும்,

மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,000 பரிசும்,

நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,000 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.

Friday, February 23, 2018

பேராவூரணி ஏர்செல் மீண்டும் செயல்பட தொடங்கியது.

பேராவூரணி ஏர்செல் மீண்டும் செயல்பட தொடங்கியது.

பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏர்செல் நிறுவனத்தின் செல்போன் சேவை பாதிப்பு பொதுமக்கள் வியாபாரிகள் தவிப்பு.

மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஆட்சியர் ஆய்வு.

மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஆட்சியர் ஆய்வு.

பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் ஒன்றியம்,  மல்லிப்பட்டினத்தில்  மீன்பிடி துறைமுகத்தினை நவீனப்படுத்தி மறுகட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார் .
மல்லிப்பட்டினத்தில் கடலோர பேரழிவு இன்னல் நீக்கும் திட்டத்தின் கீழ் ரூ.60 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்தி மறு கட்டமைப்பு வசதிகள் செய்யும் பணியில் மீன்வளத்துறை அலுவலகம் வலை உலர்களம்,  மீன் விற்பனை மையம்,  கழிவறைகள், கூடுதலாக படகு இறங்குதளமும் அமைக்கப்பட்டு வருவதை ஆட்சியர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், சுற்றுலாத் தலமான மனோரா பகுதியில் ஆய்வு செய்து மின் விளக்குகள் எல்.இ.டி. பல்புகளை மாற்றிடவும்,  100 நாள் வேலை திட்டத்தில் மரக்கன்றுகளை நட்டும் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திடவும் உள்ளாட்சித்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது,  வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு,  பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன்,  வட்டாட்சியர் ரகுராமன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

குளமங்கலம் அருள்மிகு பெருங்காரையடி மிண்ட அய்யனார் திருக்கோயில் மாசி மகத் திருவிழா
அழைப்பிதழ்.

குளமங்கலம் அருள்மிகு பெருங்காரையடி மிண்ட அய்யனார் திருக்கோயில் மாசி மகத் திருவிழா அழைப்பிதழ்.

குளமங்கலம் அருள்மிகு பெருங்காரையடி மிண்ட அய்யனார் திருக்கோயில் மாசி மகத் திருவிழா 01.03.2018 முதல் 03.03.2018 வரை திருவிழா நடைபெறுகிறது.

பேராவூரணி ரயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் ரயில்வே கேட்டை
மூடக்கூடாது என வலியுறுத்தல்.

பேராவூரணி ரயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் ரயில்வே கேட்டை மூடக்கூடாது என வலியுறுத்தல்.

பேராவூரணியில் ரயில் பாதையை ஆய்வுசெய்ய வந்த ரயில்வே அதிகாரிகளைபொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். காரைக்குடி- திருவாரூர் அகல ரயில்பாதை பணிகளுக்காக கடந்த 5 ஆண்டுகளாக காரைக்குடி-திருவாரூர் இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையில் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்துள்ளது.தற்போது பேராவூரணியில் நீலகண்டபுரம் செல்லும் வழியில் உள்ளநூறாண்டு பழமை வாய்ந்த ஆளில்லா ரயில்கேட்டை நிரந்தரமாக தடுப்பு அமைத்து மூடிவிட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த ரயில்வே கேட்டைமூடினால் இவ்வழியே அமைந்துள்ளகுடியிருப்புகள், மருத்துவமனை, அரசு தொடக்கப்பள்ளி ஆகியவற்றிற்கு பொதுமக்கள் செல்லமுடியாத நிலை ஏற்படும்.மேலும் இவ்வழியே 30-க்கும்மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும்பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும் கூறி, இந்த ரயில்வே கேட்டை (எண்- எல்.சி.21) மூடக் கூடாது என குழு அமைத்து போராடிவருகின்றனர். மேலும் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், அரசியல் கட்சியினர், ஆட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்ட பலரையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். ரயில்வே கேட்டை மூடும் முடிவை கைவிட வலியுறுத்தி பிப்ரவரி 28 ஆம் தேதி பேராவூரணி பேருந்து நிலையம் அருகில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் சாலை மறியலும், தொடர்ந்து ரயிலை இயக்கினால் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்போவதாக போராட்டக்குழு தலைவர் வழக்கறிஞர் எஸ்.மோகன்தெரிவித்திருந்தார்.இந்நிலையில் ரயில்வே உயரதிகாரிகள் புதன்கிழமை மாலை 7 மணியளவில் குடை வண்டியில் (டிராலி)அமர்ந்து ரயில்பாதை ஆய்வில் ஈடுபட்டனர். இதையறிந்த இப்பகுதியை சேர்ந்த 300 பெண்கள் உள்ளிட்ட 500 பேர் டிராலியை மறித்து, தடுத்துநிறுத்தி அதிகாரிகளை முற்றுகையிட்டு, ரயில்வே கேட்டை மூடக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், ரயில்வே உயர் அலுவலர்களை மீட்டு, வட்டாட்சியர் அலுவலகம் அழைத்துச் சென்றனர்.பின்னர் வட்டாட்சியர் முன்னிலையில் ரயில்வே அதிகாரிகள் ரவிக்குமார், மனோகர், ஜான் பிரிட்டோ, ரயில்வே ஒப்பந்ததாரர் பிரசாத் ரெட்டி மற்றும் பொதுமக்கள் சார்பில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன், கணேசன் சங்கரன், பழனிவேலு சங்கரன், முகமது யாசின், எஸ்.சத்தியமூர்த்தி, ராஜா, செந்தில்குமார், தங்கவேலு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.முடிவில் இதுகுறித்து உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிப்பதாகவும், மற்ற விசயங்கள் குறித்து பிப்ரவரி 24 ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் பேசி முடிவு செய்யலாம் என வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தெரிவித்தையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது.

தென்னையில் சத்து பற்றாக்குறை போக்கும் வழிமுைற விவசாயிகளுக்கு ஆலோசனை.

தென்னையில் சத்து பற்றாக்குறை போக்கும் வழிமுைற விவசாயிகளுக்கு ஆலோசனை.

தென்னையில் காணப்படும் சாம்பல் சத்து மற்றும் போரான் சத்து பற்றாக்குறையை போக்கும் வழிமுறைகள் குறித்து சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் விளக்கமளித்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தென்னைக்கு மற்ற சத்துக்களை விட சாம்பல் சத்துதான் மிக அதிகமாக தேவைப்படுகிறது. இந்த சத்து குறைந்தால் தேங்காய் அளவு சிறுத்து, எண்ணிக்கையும் குறைந்து விடும். மேல்இலைகள் பசுமையாக இருந்தாலும் அடி இலைகளில் வெளிர்பச்சை நிற புள்ளிகள் தோன்றி மஞ்சள் நிறமடைந்து பின்னர் பழுப்பு நிறமடையும் இலைகள் கீழ்நோக்கி தொங்க தொடங்கும்.

முதிர்ச்சி அடையும் முன்பே இலைகள் உதிர்ந்து விடும் இக்குறையினை போக்கிட 5 வருடங்களுக்கு மேல் வயதுடைய தென்னைமரத்திற்கு ஒரு வருடத்திற்கு 50 கிலோ நன்கு மக்கிய தொழுஉரத்துடன் யூரியா 1.300 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 3.500 கிலோ உரங்களை கலந்து மரத்தடியில் இருந்து 5 அடி தள்ளி வட்டமாக உரமிட்டு மண்வெட்டியால் உரத்தை மண்ணுடன் கலந்து பிறகு நீர்பாய்ச்ச வேண்டும்.
மேற்கண்ட உரத்தினை இரண்டாக பிரித்து ஜூன் , ஜூலை மாதத்திலும், டிசம்பர், ஜனவரி மாதத்திலும் இரண்டு முறையாக பிரித்து இட வேண்டும். பொட்டாஷ் உரம் 2 கிலோவிற்கு பதிலாக 3.500 கிலோ இடுவதினால் தென்னையை தாக்கும் ஈரியோபைட் சிலந்தி கட்டுப்படுத்தப்படுகிறது. போரான்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால்  தென்னைமரத்திற்கு ஆண்டுதோறும் ஒரு மரத்திற்கு ஒரு கிலோ வீதம் தென்னை நுண்ணூட்ட சத்து உரத்தினை இட வேண்டும் அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தயாரிப்பான தென்னை ஊட்டச்சத்துகரைசல் (தென்னை டானிக்) மரம் ஒன்றுக்கு 200 மில்லி வீதம் 6 மாதத்திற்கு ஒரு முறை வேர்மூலம் செலுத்த வேண்டும். என அதில் தெரிவித்துள்ளார்.

பேராவூரணி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட
தொடக்க விழா.

பேராவூரணி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா.

பேராவூரணி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 1,2,3 சார்பாக தொடக்க விழா ஏனாதிகரம்பை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் க.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கல்லூரி அறிவியல் ஆலோசகர் ராமையன், கல்வியியல் கல்லூரி முதல்வர் சோலாச்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேரா கி.புவனேசுவரி வரவேற்றார். பேராசிரியர் ஜி.கீதா அறிக்கை வாசித்தார்.நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேரா ஏ.பழனிவேலு நன்றி கூறினார். தொடர்ந்து பள்ளி மற்றும் கிராமப் பகுதிகளில் தூய்மைப்பணி மற்றும் சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் ஈடுபட்டனர்.

பேராவூரணி அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ முகாம்.

பேராவூரணி அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ முகாம்.

பேராவூரணி அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான கலந்தாலோசனை கூட்டம் மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது.முகாமிற்கு தஞ்சை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஜி.ரங்கநாதன் தலைமைவகித்தார். மருத்துவ முகாமை பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். திருச்சி கியூமெட் மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை டாக்டர் கோகுல் தலைமையிலான மருத்துவக்குழுவினர் முகாமில் பங்கேற்றவர்களுக்கு பரிசோதனைகளை செய்து மருத்துவ ஆலோசனை மற் றும் மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.

Wednesday, February 21, 2018

பேராவூரணி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் தேர்வுக்குத் தயாராவோம் சிறப்புச்
சொற்பொழிவு.

பேராவூரணி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் தேர்வுக்குத் தயாராவோம் சிறப்புச் சொற்பொழிவு.



பேராவூரணி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வு எழுத தயாராக இருக்கும் 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு பயன் தரும் வகையில்
"தேர்வுக்குத் தயாராவோம்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் சி.கஜானாதேவி தலைமையில் புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஓய்வுபெற்ற ஆசிரியர் செல்வி விஜயலெக்சுமி சிறப்புரையாற்றினார். மெய்ச்சுடர் நா. வெங்கடேசன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். "இந்நிகழ்வு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கையெழுத்து அழகாக இல்லை என்று இதுநாள் வரை எனக்குத் தாழ்வு மனப்பான்மை இருந்த்து. இந்நிகழ்வுக்குப் பின் எனக்கு நம்பிக்கை பிறந்துள்ளது." என்று மாணவர்கள் நெகிழ்சியோடு தெரிவித்தனர்.



நன்றி:மெய்ச்சுடர்

பேராவூரணி சுற்றியுள்ள பகுதிகளில் ஏர்செல் நிறுவனத்தின் செல்போன் சேவை மீண்டும்
பாதிப்பு.

பேராவூரணி சுற்றியுள்ள பகுதிகளில் ஏர்செல் நிறுவனத்தின் செல்போன் சேவை மீண்டும் பாதிப்பு.

பேராவூரணி சுற்றியுள்ள பகுதிகளில் ஏர்செல் நிறுவனத்தின் செல்போன் சேவை மீண்டும் பாதிப்பு பொதுமக்கள் வியாபாரிகள் தவிப்பு.

பேராவூரணி அருகே மருத்துவ முகாம்.

பேராவூரணி அருகே மருத்துவ முகாம்.

பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் பிள்ளையார் திடலில் மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவ முகாமை பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுபாஷ் சந்திரபோஸ்வரவேற்றார்.மருத்துவ அலுவலர்கள் இராமலிங்கம், இளவரசி, காவிய ப்ரீத்தி, ஷர்மிளா மற்றும் செவிலியர்கள், சுகாதாரத் துறைப் பணியாளர்கள் 850-க்கும் மேற்பட்டபொதுமக்களுக்கு பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். இதில் 12 பேர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். பொதுமக்களுக்கு இசிஜி, ரத்தப்பரிசோதனை, பொது மருத்துவம், சித்த மருத்துவம், பல் மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது. வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் மற்றும் பிள்ளையார்திடல், வெளிமடம், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


பேராவூரணி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

பேராவூரணி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

பேராவூரணி காவல்நிலையம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாயன்று நடைபெற்றது.நீலகண்டப் பிள்ளையார் ஆலயம் அருகே, காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன் முன்னிலையில், பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார். இதில் துணை வட்டாட்சியர் யுவராஜ், காவல்துறை தனிப்படை ஏட்டு ஆதிமூலம், காவலர் மதுசூதனன், அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் நா.பழனிவேலு, பேரா.முத்துக்கிருஷ்ணன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் இராமநாதன், பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் கே.நீலா, ஏ.கோகிலம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் 500 பேர் கலந்து கொண்டு, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியில் சென்றனர்.



 

Monday, February 19, 2018

தென்னையை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்.

தென்னையை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்.

தென்னையை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராவூரணி வட்டாரத்தில் நாட்டாணிக்கோட்டை, கழனிவாசல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தென்னையை தாக்கும் புதுவகையான ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் மதியரசன் தெரிவித்திருப்பதாவது: ரூகோஸ் சுருள் வெள்ளைஈக்கள் தென்னை மட்டை இலைகளின் கீழ்பரப்பில் சுருள் சுருளாக வெண்மை நிறத்தில் முட்டைகளை ஈன்று வைத்திருக்கும். முட்டைகள் அடர்ந்த வெண்ணிற மெழுகு போன்ற துகள்களால் மூடப்பட்டிருக்கும்.

இவற்றின் உடலில் இருந்து சுரக்கும் ஒருவகை தேன் போன்ற இனிப்பு திரவத்தால் இலைகளின் மேற்பரப்பு முழுவதும் கரும்பாசனம் (சூட்டிமோல்டு) பெருமளவில் வளர்ந்து பயிரின் இலை பரப்பு முழுவதும் கருப்பு நிறமாக மாறிவிடும். இதனால் ஒளிச்சேர்க்கை முற்றிலும் தடைப்பட்டு பயிர் வளர்ச்சி குன்றிவிடும். இப்பூச்சிகளால் இலைகளில் சாறு உறிஞ்சப்பட்டு மஞ்சள் நிறமடைந்து நாளடைவில் சருகுபோல் காய்ந்துவிடும். இப்பூச்சிகள் தென்னை மட்டுமின்றி மா, வாழை, கொய்யா, சப்போட்டா, வெண்டை, காட்டாமணக்கு, சீத்தா பழம், எலுமிச்சை, செம்பருத்தியையும் தாக்குகிறது.

இதை கட்டுப்படுத்துவதற்கு முன்பாக பூச்சி தாக்குதலுக்குண்டான தோப்புகளில் ரசாயன பூச்சி கொல்லிகளை பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் நன்மை செய்யக்கூடிய பூச்சிகள் அழிந்துவிடும். பூச்சி தாக்குதலின் ஆரம்ப நிலையிலேயே மஞ்சள் நிற ஒட்டு பொறிகளை ஏக்கருக்கு 7 - 10 என்ற அளவில் தோப்புகளில் வைத்து பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இப்பூச்சிகளின் தாய் பூச்சிகளின் நடமாட்டம் மலை 6 முதல் இரவு 8 மணி வரை அதிகமாக இருக்கும் என்பதால் ஏக்கருக்கு 2 விளக்குப்பொறிகளை அமைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.

இலைகளின்கீழ் காணப்படும் முட்டைகள் இளம்பருவ மற்றும் முதிர்ந்த பூச்சிகளை ராக்கர் ஸ்பிரேயர் மற்றும் பவர் ஸ்பிரேயர் கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பூச்சிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். பூச்சி தாக்குதலால் ஏற்படும் கரும் பூஞ்சாண வளர்ச்சியை அகற்ற லிட்டருக்கு 25 கிராம் மைதா மாவு பசையை தண்ணீரில் கலந்து அவற்றை இலைகளின் மேற்பகுதி நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். இப்பூச்சிகளுக்கு இயற்கையாகவே எதிரி பூச்சிகளாக தோப்புகளில் காணப்படும் பச்சைகண்ணாடி இறக்கை பூச்சிகள், பொறி வண்டுகள், ஒட்டுண்ணி, குளவியை பாதுகாக்க வேண்டும்.

இப்பூச்சியை கட்டுப்படுத்த மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம் திருச்சி ஆய்வகத்திலிருந்து பச்சைகண்ணாடி இறக்கை பூச்சிகளின் முட்டைகள், இளம்பருவ பூச்சிகள் அடங்கிய ஒட்டுண்ணி அட்டைகளை தென்னை மட்டைகளில் உள்ள ஓலைகளில் ஆங்காங்கே பின்னடித்து வைக்க வேண்டும் அல்லது  கட்டி தொங்கவிட வேண்டும். பூச்சிகளை தாக்கி அழிக்கக்கூடிய இரை விழுங்கியான (பிரிடேட்டர்ஸ்) என்கார்சியா எனும் கூட்டுப்புழு பருவ ஒட்டுண்ணி குளவிகளை தோப்புகளில் விட வேண்டும்.

தேவைப்பட்டால் மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் பதிவு குழுவால் பரிந்துரைக்கப்பட்ட தாவரபூச்சி விரட்டியான 5 சத வேப்பங்கொட்டை கரைசல், 10 சத வேப்ப இலைக்கரைசல், 0.5 சத வேப்ப எண்ணெய் கரைசல், மீன் எண்ணெய் சோப்புக்கரைசல் மூலிகை பூச்சி விரட்டி இவற்றில் ஏதேனும் ஒன்றை தெளித்தும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

பழை பேராவூரணி மாபெரும் சுழற்கோப்பைக்கான கபாடி போட்டி 24-02-2018.

பழை பேராவூரணி மாபெரும் சுழற்கோப்பைக்கான கபாடி போட்டி 24-02-2018.



பழை பேராவூரணி புதுயுகம் கபாடிகுழு நண்பர்கள் நடத்தப்படும் முதலாம் ஆண்டு சுழற்கோப்பைக்கான மாபெரும் கபாடி போட்டி.

பழை பேராவூரணியில் வருகிற 24-02-2018 சனிக்கிழமை இரவு 10 மணி 47+2 கிலோ எடை பிரிவிற்கான சுழற்கோப்பைக்கான மாபெரும் கபாடி போட்டி.

முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹5,001 பரிசும்,
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹4,001 பரிசும்,
மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹3,001 பரிசும்,
நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹2,001 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.

மேலும் இப்போட்டியில் பங்கேற்க 47+2 கிலோ எடைகொண்ட அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹200 நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும்.

வடகாடு மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி 24.02.2018.

வடகாடு மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி 24.02.2018.

வடகாடு இஸ்லாமிய இளம்பிறை இளைஞர்கள் மற்றும் மர மார்க்கெட் இணைந்து நடத்தப்படும்  மின்னொளி கைப்பந்து போட்டி 24-02-2018 சனிக்கிழமை நடைபெறுகிறது.

இந்த போட்டி இரவு 09 மணியளவில் தொடங்கி நடைபெறவுள்ள கைப்பந்து போட்டி

முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹5,000 பரிசும்,

இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹4,000 பரிசும்,

மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹3,000 பரிசும்,

நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹2,000 பரிசும்,

ஐந்தாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹1,000 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.

தஞ்சாவூர் வழியாக செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்களின் எண்கள் மாற்றம்.

தஞ்சாவூர் வழியாக செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்களின் எண்கள் மாற்றம்.

தஞ்சையில் இருந்து சென்னைக்கு உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16184) இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் மறுமார்க்கமான சென்னையில் இருந்து தஞ்சைக்கு (வண்டி எண் 16183) ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் திருச்சியில் இருந்தும், சென்னையில் இருந்தும் தஞ்சை வழியாக சோழன்எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16854, 16853) இயக்கப் படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து ராமேசுவரத்துக்கும் தஞ்சை வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (வண்டி எண்கள் 16102, 16101) இயக்கப்படுகிறது. தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் இயக்கப்படும் இந்த 3 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் எண்களும் மாற்றம் செய்யப்படுகிறது.

தஞ்சையில் இருந்து செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 168656), சென்னையில் இருந்து தஞ்சை வரும் ரெயில் (வண்டி எண் 16865) என மாற்றம் செய்யப்படுகிறது. திருச்சியில் இருந்து புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்16796), சென்னையில் இருந்து புறப்படும் ரெயில் (வண்டி எண் 16795) மாற்றம் செய்யப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயில் (வண்டி எண் 16852), சென்னையில் இருந்து புறப்படும் ரெயில் எண் (வண்டி எண் 16851) என மாற்றம் செய்யப்படுகிறது.

இந்த ரெயில் எண்கள் மாற்றம் வருகிற மார்ச் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவிலில் நடக்கும் மாசி திருவிழாவை
முன்னிட்டு இங்குள்ள பெரிய குதிரை சிலைக்கு காகிதப்பூ மாலைகள் கட்டும் பணி தீவிரம்

குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவிலில் நடக்கும் மாசி திருவிழாவை முன்னிட்டு இங்குள்ள பெரிய குதிரை சிலைக்கு காகிதப்பூ மாலைகள் கட்டும் பணி தீவிரம்

கீரமங்கலம் அடுத்த குளமங்கலம் கிராமத்தில் உள்ள வில்லுனி ஆற்றங்கரையில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் மிக உயரமான 33 அடி உயர குதிரை சிலை உள்ளது. இந்த குதிரை சிலை வானில் தாவிச் செல்லும் தோற்றத்தில் காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழாவின்போது புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். அதனையொட்டி சிறப்பு பஸ் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

பெரிய குதிரை சிலைக்கு மாலை அணிவிப்பது தான் இந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாக உள்ளது. திருவிழா நாளில் குதிரை சிலையின் உயரத்திற்கு ஏற்றார்போல சுமார் 2 ஆயிரம் காகிதப் பூ மாலைகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்துவார்கள். இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வருவது உண்டு. இந்த ஆண்டு மாசி திருவிழா வருகிற 1-ந்தேதி மற்றும் 2-ந்தேதி நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் 33 அடி உயர பெரிய குதிரை சிலைக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் காகிதப்பூ மாலைகள் கட்டும் பணியில் கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம், மறமடக்கி, திருநாளூர், ஆவணத்தான்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கீரமங்கலத்தில் பல இடங்களில் காகிதப்பூ மாலைகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொத்தமங்கலத்தில் காகிதப்பூ மாலை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி ஒருவர் கூறுகையில், மாசி திருவிழாவிற்கு 2 மாதங்களுக்கு முன்பு இருந்தே மாலை கட்டும் பணியில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் இருந்து வண்ண காகிதங்கள் வாங்கி வந்து தேவையான அளவில் வெட்டி மாலையாக கட்டப்படும். ஒரு மாலை குறைந்தது ரூ. 2 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது. முன்னதாக ஆர்டர் கொடுத்தவர்களுக்கே இப்பொது மாலை கட்டி வருகிறோம் உடனடியாக மாலை வேண்டும் என்று கேட்டால் கிடைக்காது. குதிரை சிலைக்கு மாலை அணிவிக்கும் அழகை காணவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். அதனால் ஒவ்வொரு ஆண்டும் புதிய மாடல்களில் மாலைகள் கட்டப்படுகிறது. என்றார்.

அதிராம்பட்டினம் ASC ஸ்போட்ஸ் கிளப் நடத்தப்படும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி.

அதிராம்பட்டினம் ASC ஸ்போட்ஸ் கிளப் நடத்தப்படும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி.

அதிராம்பட்டினம் ASC நடத்தும் 10-ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி 24,25.02.2018

Sunday, February 18, 2018

பேராவூரணி - சேது சாலையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள
மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

பேராவூரணி - சேது சாலையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

பேராவூரணி பெண்கள் பள்ளி செல்லும் வழியில் உள்ள மதுக்கடையை மூடிவிடுவதாக வட்டாட்சியர், கோட்டாட்சியர், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் போன்ற அதிகாரிகளின் எழுத்துபூர்வ உறுதிமொழியை நிறைவேற்ற தடையாக இருக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், மதுக்கடை எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களைக் கைது செய்த்தைக் கண்டித்ததும் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



 
பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏர்செல் நிறுவனத்தின் செல்போன் சேவை
பாதிப்பு பொதுமக்கள்- வியாபாரிகள் தவிப்பு.

பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏர்செல் நிறுவனத்தின் செல்போன் சேவை பாதிப்பு பொதுமக்கள்- வியாபாரிகள் தவிப்பு.

பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏர்செல் நிறுவனத்தின் செல்போன் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வணிகர்கள் செய்வதறியாது தவித்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொன்றைக்காடு, காலகம், ஒட்டங்காடு, குருவிக்கரம்பை, சேதுபாவாசத்திரம், ரெட்டவயல்,பெருமகளூர், சித்தாதிக்காடு, செங்கமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் ஏர்செல் நிறுவனத்தின் செல்போன் சேவைதிடீரென பாதிக்கப்பட்டது.30 மணி நேரம் கடந்தும் சனிக்கிழமை மதியம் வரை செல்போன் சேவை கிடைக்கவில்லை.

இதனால் ஏர்செல் நிறுவன சிம்கார்டு பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரி, வேலைக்குச் சென்ற குடும்பஉறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் பலரும் தவித்தனர்.இணையவழியைப் பயன்படுத்தி பல்வேறு பணிகளைச் செய்வோர் சிரமத்திற்குள்ளாகினர். வாடிக்கையாளர் சேவை மையத்தையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் மொபைல் போன் சிம்கார்டு, ரீசார்ஜ் செய்யும் கடைகளில் வியாபாரம் பாதித்தது.

செல்போன் டவர் வாடகை மற்றும் மின்கட்டணத்தைச் செலுத்தாததால், மின்வாரியஅதிகாரிகள் டவருக்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்தி வைத்து நடவடிக்கை எடுத்ததன் காரணமாக செல்போன் டவர் இயங்கவில்லை எனக் கூறப்படுகிறது.இதுகுறித்து பேராவூரணியைச் சேர்ந்த ஆத.சுப.மணிகண்டன் கூறுகையில், “ ஏர்செல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றிசேவையை நிறுத்தியது கண்டிக்கத்தக்கது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். டிராய் ஆணையம் உடனடியாக ஏர்செல் நிறுவனத்தின் சேவைக்குறைபாடு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


 நன்றி:தீக்கதிர்
பேராவூரணி அடுத்த காலகம் ஊராட்சியில் திமுக தொண்டர்கள் கலந்தாய்வுக் கூட்டம்.

பேராவூரணி அடுத்த காலகம் ஊராட்சியில் திமுக தொண்டர்கள் கலந்தாய்வுக் கூட்டம்.

பேராவூரணி அடுத்த காலகம் ஊராட்சியில் திமுக தொண்டர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. காலகம் ஊராட்சிக் கழக அவைத்தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் பழனிவேல், தெட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொண்டர்களின் நிறை குறைகளை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், திருவோணம் ஒன்றிய திமுக செயலருமான மகேஷ்கிருஷ்ணசாமி கேட்டறிந்தார். மார்ச்1- ஸ்டாலின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடுவது. ஈரோடு மாநாட்டில் திரளானோர் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய பொறுப்பாளர் க. அன்பழகன், முன்னாள் ஒன்றியச் செயலர் சுப. சேகர், பேராவூரணி நகர திமுக செயலர் கோ. நீலகண்டன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோ. அருள், வழக்குரைஞர் கருணாகரன், முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

பேராவூரணி பேருந்து நிலையத்தில் இருந்து நாட்டாணிக்கோட்டை செல்லும் வழியில் ரயில்வே
தண்டவாளத்தை ஒட்டியுள்ள சாலை சீரமைப்பு.

பேராவூரணி பேருந்து நிலையத்தில் இருந்து நாட்டாணிக்கோட்டை செல்லும் வழியில் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள சாலை சீரமைப்பு.

பேராவூரணி பேருந்து நிலையத்தில் இருந்து நாட்டாணிக்கோட்டை செல்லும் வழியில் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது. பேராவூரணி பேருந்து நிலையத்தில் இருந்து நாட்டாணிக்கோட்டை செல்லும் சாலையில் ரயில்வே இருப்புப்பாதை அமைந்துள்ளது. தற்போது காரைக்குடி- திருவாரூர் அகல ரயில்பாதைப் பணிகள் நடைபெற்று வருவதால், சாலையை இருபக்கமும் உயர்த்தி, நடுவில் தண்டவாளம் அமைக்கும் பணிநடைபெற்று வருகிறது. இதற்காக மூன்றுமாதங்களுக்கும் மேலாக சாலையை பெயர்த்து, கருங்கல் ஜல்லிகளைக் கொட்டி, சாலையில் பரப்பி வைத்துள்ளனர். ஆனால், தார் ஊற்றி சாலை சீர்செய்யப்படவில்லை.

மேடும், பள்ளமுமாக உள்ள இந்தச் சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. மணல் கொட்டிக் கிடப்பதால் வாகனங்கள் செல்லும்போது புழுதி மண் கிளம்புகிறது. இதனால் அருகில் குடியிருப்போர், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்செயலாளர் கொன்றை வே.ரெங்கசாமி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை காலைசாலையைச் சீரமைக்கும் பணி தொடங்கியது. சம்பந்தப்பட்ட துறை பொறியாளர்கள் மேற்பார்வையில் தார் ஊற்றி சாலையைச் சீரமைத்து வருகின்றனர்.


நன்றி:தீக்கதிர்

Saturday, February 17, 2018

எள் பயிரை தாக்கும் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறை விவசாயிகளுக்கு ஆலோசனை/

எள் பயிரை தாக்கும் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறை விவசாயிகளுக்கு ஆலோசனை/

பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் சாகுபடி செய்துள்ள எள் பயிரை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு ஆேலாசனை வழங்கப்பட்டது. இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் மாசிபட்ட எள் வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ளது. இப்பயிர்களை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த பூச்சிகளை பொருத்தவரை மிக முக்கியமானது தண்டு பினைப்பான் மற்றும் காய்பினைப்பான். இவை தண்டு பகுதியை ஒன்றோடு ஒன்றாக பிணைத்து துவாரமிட்டு சேதப்படுத்தியும், வளர்ந்த பயிர்களில் இளம் காய்களில் துவாரமிட்டு பூ மற்றும் பிஞ்சுகளை சேதப்படுத்தி மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. இவைகளை கட்டுப்படுத்த விதைத்த 25, 35 மற்றும் 50வது நாட்களுக்கு பிறகு பாசோலோன் 400 மில்லி அல்லது மானோகுரோட்டபாஸ் 400 மில்லி அல்லது கார்பரில் 50 சத தூள் 400 கிராம் இதில் ஏதாவது ஒன்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் பரப்பில் மாலை வேளையில் கைதெளிப்பானால் தெளிக்க வேண்டும். அல்லது 2 சதவீதம் வேப்பெண்ணெய் கரைசலை 2 முறை தெளிக்க வேண்டும். மற்றொரு சேதம் விளைவிக்க கூடிய பூச்சிகளில் காவடி புழுவும் ஒன்று. இப்புழு 60 மி.மீ நீளமாகவும், கருமை கலந்த பழுப்பு உடலில் செம்புள்ளிகளுடனும் கருப்பு தலையுடன் காவ போன்று வளைந்து செல்லும். இலைகளை வெகுவிரைவாக தின்று அழித்துவிடும்.
இதை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 750 மில்லி மாலத்தியான் அல்லது 400 மில்லி பெண்தியான் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். நோய்களை பொருத்தவரை வேரழுகல் நோய் மற்றும் பூவிலை நோயாகும். பூவிலை நோய் தாக்கிய செடிகளை முற்றிலும் பிடிங்கி அழித்துவிட வேண்டும். வேரழுகல் நோயை கட்டுப்படுத்த விதை விதைக்கும்போதே விதையுடன் டிரைக்கோடெர்மாவிரிடின் என்ற பூசாணகொல்லி மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் கலந்து விதைக்க வேண்டும். விதைத்து செடி வளர்ந்த பின் இந்நோய் தோன்றினால் 1 சத கார்பன்டாசிம் (1 லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் மருந்து) மருந்தை வேரின் அடிப்பாகத்தில் வேர் நன்றாக நனையுமாறு ஊற்ற வேண்டும்.
பேராவூரணி ஆதிமுத்து சரோஜா திரையரங்கத்தில் நாச்சியார்.

பேராவூரணி ஆதிமுத்து சரோஜா திரையரங்கத்தில் நாச்சியார்.

பேராவூரணி ஆதிமுத்து சரோஜா திரையரங்கத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி பிரகாஷ், இவானா நடித்துள்ள வெளியாகியிருக்கும் திரைப்படம் நாச்சியார் திரைப்படம் தினசரி நான்கு காட்சிகள் திரையிடப்படுகிறது.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கண்டித்து இளைஞர்கள் முற்றுகை போராட்டம்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கண்டித்து இளைஞர்கள் முற்றுகை போராட்டம்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை என கண்டித்து இளைஞர்கள் முற்றுகை போராட்டம்.







 
பேராவூரணியில் ஏர்செல் சேவை இரண்டு நாட்களுக்கு பிறகு செயல்பட தொடங்கியது

பேராவூரணியில் ஏர்செல் சேவை இரண்டு நாட்களுக்கு பிறகு செயல்பட தொடங்கியது

பேராவூரணியில் ஏர்செல் நிறுவனத்தின் சேவை நேற்று 12 மணி முதல் இன்று 07 மணி க்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கியது.

பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா.

பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா.



பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற முப்பெரும் விழாவை தொடங்கி வைத்து பின் இலக்கிய விழா, ஆண்டு விளையாட்டு விழா போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராசு அவர்கள் பரிசுகள் வழங்கினார்.









 








பேராவூரணி நீலகண்டபுரம் இரயில்வே கேட் அமைக்க வலியுறுத்தி சாலை மறியல் குறித்த
கலந்தாய்வுக் கூட்டம்.

பேராவூரணி நீலகண்டபுரம் இரயில்வே கேட் அமைக்க வலியுறுத்தி சாலை மறியல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்.



பேராவூரணி நீலகண்டபுரம் இரயில்வே கேட் அமைக்க வலியுறுத்தி 28/02/2018 இல் நடைபெற உள்ள சாலை மறியல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நீலகண்ட பிள்ளையார் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

பேராவூரணியில் நீலகண்டபுரம் ரயில்வே கேட்டை மூடப்போவதாக அறிவித்துள்ள ரயில்வே நிர்வாகத்தின் முடிவை ரத்து செய்து, மீண்டும் இயக்க வலியுறுத்தி வரும் பிப் 28 ஆம் தேதி புதன்கிழமை சாலைமறியல் நடத்தப்போவதாக ரயில்வே கேட் உபயோகிப்பாளர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.







நன்றி : மெய்ச்சுடர்








Friday, February 16, 2018

பேராவூரணி அடுத்த பின்னவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குடிநீர் வசதி
செய்து தர கோரிக்கை.

பேராவூரணி அடுத்த பின்னவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குடிநீர் வசதி செய்து தர கோரிக்கை.

பேராவூரணி அடுத்த பின்னவாசல் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு குடிதண்ணீர் வசதி செய்துதரவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் சார்பாகமுன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் பின்னவாசல் பெரியய்யாதஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரைக்கு கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளார்.அதில் கூறியிருப்பதாவது: பின்னவாசல்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.பிரசவங்களும் நடக்கிறது. இச்சூழ் நிலையில் சுகாதார நிலையத்திற்கு தண்ணீர்வசதி இல்லாததால் மருத்துவர்கள், செவிலியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகேட்டுக் கொண்டுள்ளார்.ஊழல் அதிகாரிகள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு பின்னவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆழ்துளைக்கிணறு, நீர்த்தேக்க தொட்டி ஆகியவை அண்மையில் அமைக்கப்பட்டதாகவும், ஒப்பந்ததாரர் ஆழ்துளைக்கிணறை முறையாக அமைக்காமல், ஆழம்குறைவாக அமைத்ததால் தண்ணீர் வரவில்லை என்றும், தரம் குறைந்த நீர்மூழ்கிமோட்டாரை பயன்படுத்தியதால் பழுதடைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 150 அடிக்கு கீழே உள்ள நிலையில், வரும் கோடை காலத்தில் 200 அடிக்கும் கீழே செல்லும் சூழல் உள்ளது. சாதாரணமாக இப்பகுதியில் வீடுகளுக்கு 250 அடி ஆழத்தில் ஆழ்துளைக்கிணறுகள் அமைக்கப் படும் நிலையில், ஒப்பந்ததாரர்கள் நூறு அடிஆழத்தில் ஆழ்துளைக்கிணறுகள் அமைப்பதும், தரம் குறைந்த நீர்மூழ்கி மோட்டார், பைப், நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதால் ஓரிரு மாதங்களிலேயே பழுதடைந்து பயன்படாமல் போவதும், அரசுப் பணம் வீணாவதும் தொடர்கதையாகி விட்டது. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, ஒப்பந்ததாரர்களுக்கு துணைபோகும் ஊழல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேராவூரணி அடுத்த பெருமகளூர் தமிழக அரசின் சிறப்புத்திட்ட முகாம்.

பேராவூரணி அடுத்த பெருமகளூர் தமிழக அரசின் சிறப்புத்திட்ட முகாம்.

பேராவூரணி அடுத்த பெருமகளூர் வடபாதியில் தமிழக அரசின் சிறப்புத்திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமைவகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் சாந்தகுமார் முன்னிலை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் செல்வகுமார், தலைமைநில அளவையர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன், கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர்மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.இம்முகாமில் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வட்டாட்சியரிடம் அளித்தனர்.

பேராவூரணியில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் 28-02-2018.

பேராவூரணியில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் 28-02-2018.

பேராவூரணி டவுன் LCNO : 121 நீலகண்டபுரம் ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூட இருப்பதை கண்டித்து சாலை மறியல் போராட்டம்.

பழைய பேராவூரணி டேவிட் பில்லா குரூப்ஸ் நண்பர்கள் நடத்தப்படும் பொங்கல் விளையாட்டு விழா.

பழைய பேராவூரணி டேவிட் பில்லா குரூப்ஸ் நண்பர்கள் நடத்தப்படும் பொங்கல் விளையாட்டு விழா.

பழைய பேராவூரணி டேவிட் பில்லா குரூப்ஸ் நண்பர்கள் நடத்தப்படும் 5ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா.

Wednesday, February 14, 2018