பேராவூரணி ஸ்ரீ நீலகண்டபிள்ளையார் கோவில் அருகில் சித்ரா தேனீர் நிலையம் பல வருடங்களாக இயங்கி வருகிறது. இங்கு திருவள்ளுவர் தினத்தன்று தேனீர் சாப்பிட வந்த அனைவருக்கும் தேனில் ஒரு ரூபாய்க்கு விற்பற்னை செய்யப்பட்டது. பேராவூரணி பகுதியில் ஏழு ரூபாய் விற்பனை செய்துக்கொண்டிருக்கும் போது இந்த தேனீர் நிலையத்தில் ஒரு ரூபாய்க்கு தேனீர் தருவது பொது மக்களுக்கு அதிசயமாக உள்ளது.க டந்த 15 வருடங்களாக இந்த தேனீர் நிலையத்தில் திருவள்ளுவர் தினத்தன்று அதிகாலை 4 மணி முதலே தேனிர் ஒரு ரூபாய்க்கு தர ஆரம்பிக்கப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் ஆச்சரியமாக கூறுகின்றனர். மேலும் பேராவூரணி கடைதெருவில் எல்லா தேனீர் கடைகளும் மூடி இருக்கும் இந்நாளில் இந்த தேனீர் கடையில் மட்டும் ஒரு ரூபாய்க்கு தேனீர் வழங்குவது ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்த கடையை நடத்தி வருபவர் இந்த பகுதியில் நன்கு அறிமுகமான பேராவூரணி திருக்குறள் பேரவையின் தலைவர் மு.தங்கவேலனார் (70)ஆவார். இவரின் கடையில் முன்பு எப்போதும் கரும்பலகை இருக்கும். அதில் தினமும் ஒரு குறல் எழுதப்பட்டு அதன் தெளிவுரையும் இருக்கும். இவர் இப்பகுதி பட்டி மன்ற பேச்சாளர். இவரை வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் அழைத்து அங்கு விழா நடத்தி இவரின் சொற்பொழிவை கேட்பது குறிப்பிடதக்கது.பேராவூரணி பள்ளி மாணவர்களுக்கு திருக்குறளை இலவச பாடமாக கற்பிக்கிறார். இவர் படிக்க பள்ளிக்கூடம் பக்கமே போனது இல்லையாம், ஆனால் தற்போது அவர் படிக்காத புத்தகமே இல்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள் .
இதுபற்றி அவரிடம் திருவள்ளுவர் தினத்தன்று ஆண்டுகள் தோறும் ஒரு ரூபாய்க்கு தேனீர் கொடுக்கின்றீர்களே உங்களுக்கு நஷ்டம் ஏற்படாதா? என்று நமது நிருபர் கேட்டபோது திருக்குறளுக்காக வருடத்தில் ஒரு நாள் ஒரு ரூபாய்க்கு தேனீர் கொடுக்கிறேன். அதனால் எனக்கு 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை செலவாகும் இருந்தாலும் அன்றைய தினம் பொங்கல் என்பதால் எந்த தேனீர் கடையும் திறக்கபடாத நேரத்தில் நான் மட்டும் கடை திறந்து அனைவருக்கும் தேனீர் கொடுப்பது நினைத்து மனமகிழ்வு அடைகிறேன்.
என்னுடைய நோக்கம் என்னவென்றால் திருக்குறளால் உலகத்துத் தீமைகள் எல்லாம் நீக்கப்பட வேண்டும், தேவையான நல வாழ்வை திருக்குறளால் ஆக்கப்பட வேண்டும் ,
தேசமெங்கும் திருக்குறளே பொதுமறையாய் திகழ வேண்டும்.
உலகம் முழுவதும் திருக்குறள் நெறியை உணர்த்தியே ஆகவேண்டும்.
உலகத்தை அழித்திடும் ஆயுதவெறியை ஒழித்தே தீர வேண்டும்.
சாதி மதமெனும் சங்கடம் நீக்கியோர் சரித்திரம் படைக்க வேண்டும்.
சரி சமமாக எல்லோரும் வாழ்ந்திடக் சங்கர்ப்பம் ஏற்க வேண்டும்.
போதையில் விழுந்து பாதையை மறக்கும் போக்கினை உடனே மாற்ற வேண்டும்.
பாதையை உணர்ந்து பயணத்தை தொடர்ந்திட திருக்குறள் படித்தே ஆக வேண்டும்.
தினம் தினம் திருக்குறள் படித்து அதன் வழி நடந்து புதுமையான ஓர் உலகம் நாளை படைக்க வேண்டும் என்றார்.
திருக்குறள் சம்பந்தமான எந்த ஒரு தகவல் குறித்து
தெரிந்து கொள்ள இரவு 12 மணி என்றாலும் நான் தயார் என சொல்லும் தங்கவேலனாருக்கு சுவாசமே திருக்குறள் என்றால் மிகையில்லை. இந்த வயதிலும் இளைஞரைப் போல செயல்படும் தங்கவேலனார் பேராவூரணி திருக்குறள் பேரவை தலைவராக செயலாற்றி வருகிறார்.
Thursday, January 18, 2018
Author: Unknown
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: