
சேதுபாவாசத்திரம் அருகே பாண்டியன் கிராம வங்கி சார்பில் மீனவ தோழன் கடன் வழங்கும் விழாவில் 75 லட்சம் ரூபாய்மீனவர்களுக்கு கடன் வழங்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகேஉள்ள சோமநாதன்பட்டினத் தில் பாண்டியன் கிராம வங்கிசார்பில் மீனவ தோழன் கடன்வழங்கும் விழா வங்கி தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மண்டல மேலாளர் கண்ணன், ஒரத்தநாடு வங்கி கிளை மேலாளர்தினேஷ், மார்கெட்டிங் மேலாளர் ஆதித்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சோமநாதன்பட்டினம், வல்லவன்பட்டினம், மந்திரிபட்டினம், சுப்பம்மாள்சத்திரம், செந்தலைவயல் ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 பேர் அடங்கிய 10 குழுவிற்கு 50 மீனவர்களுக்கு 1.50 லட்சம் ரூபாய் வீதம் 75 லட்சம் ரூபாய் கடன் தொகையினை வழங்கி தலைவர் ரவிச்சந்திரன் பேசும்போது,
“மீனவர்கள் கந்துவட்டி, மீட்டர்வட்டி போன்ற வட்டிக்கு கடன் வாங்குவதிலிருந்து மீட்பதைமுக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதே பாண்டியன் கிராம வங்கியின் நோக்கம். ஏழ்மையில் வாடும் மீனவர்கள் வறுமையில் இருந்து மீள வேண்டும். தற்போது குறைந்த வட்டிக்கு ஒரு நபருக்கு 1.50 லட்சம்ரூபாய் கடன் வழங்கப்பட் டுள்ளது. இதை நல்ல முறையில் பயன்படுத்தி மீனவர்கள்லாபத்தை ஈட்ட வேண்டும். லாபத்தில் வங்கி கடனைகட்ட வேண்டும். உங்கள் செயல்பாட்டிற்கு தகுந்தாற் போல் கிராமங்கள் தோறும் தேடி வந்து 5 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை கடன்வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். மற்ற வங்கிகள்நகர்ப்புறங்களை நோக்கியுள்ளது. ஆனால் நாங்கள் கிராமப்புற மக்களை மேம்படுத்தும் நோக்கில் உள்ளோம். மீன்பிடி தொழில்மட்டுமின்றி கடல் சார்ந்ததொழில்கள் செய்ய மகளிருக்கும் கடன் வழங்குகின் றோம்.
வித்தியாலெட்சுமி திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி.முதல் 12 ம் வகுப்பு வரைகல்வி கடன் வழங்கப்படுகிறது. கந்துவட்டிக்கு யாரும்தயவு செய்து கடன் வாங்காதீர்கள். குறைந்த வட்டிக்கு வங்கிகள் வழங்கும் கடனை பெற்று மீனவ சமுதாய மக் கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ளுங்கள் என்றார். விழாவில் கிராமத் தலைவர்கள் மற்றும் ஏராளமான மீனவர்களும் கலந்து கொண்டனர்.
0 coment rios: