அதிராம்பட்டினம் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம்.
அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து மீனவர் கடலுக்கள் மூழ்கி பலியான சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை எற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்ட கடல் பகுதியான தம்பிக்கோட்டை முதல் அண்ணா நகர் புதுத்தெரு வரையிலான பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.கடல் பகுதியில் சற்று அதிகமான மழை பெய்து வருவதால் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த மூன்று தினங்களாக கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லாமல் இருந்துவந்தனர்.
இந்நிலையில் மழை குறைந்ததால் நேற்று அதிகாலை நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச்சென்றனர். இந்நிலையில் அதிராம்பட்டினம் கரையூர் தெரு மீன்பிடித்துறைமுகத்திலிருந்து அதே தெருவைச்சேர்ந்த கள்ளிமட்டான் என்கிற முனியாண்டி வயது 65 தனக்கு சொந்தமான நாட்டுப்படகில் நேற்று மீன்பிடிக்கச் சென்றார். அப்போது கடலிலிருந்து 4 பாகத்தொலைவில் மீன்பிடித்தக்கொண்டிருந்தபோது திடீரென பலத்தசூரைக்காற்று வீசியதுமேலும் அலை அதிக அளவு உயரம் எழுந்தது. இதையடுத்து காற்று மற்றும் அலையின் வேகத்தால் படகை கட்டுக்குள் கொண்டுவரமுடியாமல் தவித்ததால் நிலைதடுமாறி படகு கவிழ்ந்தநிலையில் முனியாண்டிகடலுக்குள் மூழ்கினார்.
அவர் நீண்டநேரமாகியும் வெளியே வராதநிலையில் சக மீனவர்கள் நீண்டநேரம் தேடுப்பார்த்தும் பலனில்லாமல் போகவே கிராமநிர்வாகத்தினருக்கு தகவல்கொடுத்தனர்.இதையடுத்து கிராமத்திலிருந்து மீனவர்கள் சென்று கவிழ்ந்த படகு மற்றும் வலையை மட்டுமே மீட்க முடிந்ததே தவிர முனியாண்டியின் உடல் மீட்க முடியாததால் அவர்கள் கடலோர காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் அதிராம்பட்டினம் கடலோர காவல் நிலைய போலீஸார்கள் மீனவர்களின் துணையுடன் கடலில் மூழ்கிய முனியாண்டியின் உடலை தேடும் பணியை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிராம்பட்டினம் கரையூர் தெரு,காந்திநகர்,ஆறுமுககிட்டங்கித்தெரு,தரகர் தெரு,கடற்கரைத்தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5 மீனவ கிராமத்தைச்சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லவில்லை.
0 coment rios: