மழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடிந்து, வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 27-ம் தேதி தொடங்கியது. படிப்படியாகப் பருவமழையின் வேகம் அதிகரித்து, கடந்த ஒரு வாரமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. அதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. அதனையடுத்து பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. அதனையடுத்து இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் விடுத்துள்ளனர்.
0 coment rios: