கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை.
கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது. முறையான வடிகால் இல்லாத காரணத்தால் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.
சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் விடியவிடிய பெய்து வரும் மழையால், அந்த பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளன. பள்ளிக்கரணையில் நாராயணபுரம் ஏரி முறையாக தூர்வாரப்படாத காரணத்தால், மழை நீர் நிரம்பி ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து வெளியேறும் தண்ணீர், 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல், மேற்கு தாம்பரம், முடிச்சூர் போன்ற பகுதிகளும் 2 நாள் மழைக்கே வெள்ளக்காடாக மாறியுள்ளன. இங்குள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி தனித்தீவை போல் காட்சியளிக்கிறது. இதனிடையே, தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நெல்லை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
0 coment rios: