பேராவூரணி 16 மி.மீ மழை பதிவு.
தஞ்சை மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. தஞ்சை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. நேற்றும் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. வெயில் அடிப்பதும் பிறகு சிறிது நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் சூழ்ந்து பலத்த மழை பெய்வதுமாக இருந்தது.நேற்று காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவு விவரம் வருமாறு (மி.மீ), அதிராம்பட்டினம் 25, கும்பகோணம் 41, பாபநாசம் 32, தஞ்சாவூர் 23, திருவையாறு 29, திருக்காட்டுப்பள்ளி 19, வல்லம் 32, கல்லணை 6.6, அய்யம்பேட்டை 31, திருவிடைமருதூர் 51.6, மஞ்சலாறு 70.60, நெய்வாசல் தென்பாதி 57, பூதலூர் 14.20, வெட்டிக்காடு 15, ஈச்சன்விடுதி 14, ஒரத்தநாடு 18.6, மதுக்கூர் 45.6, பட்டுக்கோட்டை 20.6, பேராவூரணி 16, அணைக்கரை 47.8, குருங்குளம் 13 என மழை பதிவாகியுள்ளது.
0 coment rios: