உலக நாடுகளில் இந்த வருட தீபாவளியை கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்திற்கு முன்பே வரவேற்ற பெறுமை சிங்கப்பூரைச் சாரும்.
சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 10% மட்டுமே உள்ள இந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின் உணர்வுக்கும், கலாச்சாரத்திற்கும் மதிப்பளித்து தீபாவளி, பொங்கல், தைப்பூசம் போன்றவற்றை அரசே ஏற்று சிறப்பாக நடத்துவதே வழக்கம்..
இந்த தீபாவளிக்கு இந்தியாவின் தேசிய பறவையான மயிலை கருப்பொருளாகக் கொண்டு படைக்கப்பட்ட வண்ண ஒளி விளக்குகளைக்கண்டு மயங்காதோர் இல்லை எனலாம். LITTLE INDIA வின் முகப்பில் பிரமாண்டமாய் அமர்ந்து வரவேற்கும் ஒரு ஜோடி மயில்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன..
இது தவிர தீபாவளி சந்தை, கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் என ஏராளமான சிறப்புகளுடன் தீபாவளிக்கு தயாராகி விட்டனர் சிங்கை வாசிகள்.
0 coment rios: