பேராவூரணி பகுதியில் டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது.
பேராவூரணி பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்து வருவதாக தொற்றாநோய் பிரிவு மாவட்ட மருத்துவ அலுவலர் எட்வின் தெரிவித்தார். தஞ்சை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பில் பேராவூரணி பகுதி முதலிடத்தில் இருந்தது. டெங்குவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. டெங்குவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பேராவூரணி பகுதியில் அரசு மருத்துவமனை, காவல் நிலையம், குமரப்பா மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு தொற்றாநோய் பிரிவு மாவட்ட மருத்துவ அலுவலர் எட்வின் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், பேராவூரணி பகுதியில் கடந்த 8ம் தேதிக்கு பிறகு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படவில்லை. சாதாரண காய்ச்சலுக்கு 4 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். பேராவூரணி வட்டாரத்தில் சுகாதாரப்பணிகள் சிறப்பாக உள்ளது என்றார். டாக்டர்கள் செல்வி, நஸ்ரின், சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர் உடனிருந்தனர்.
0 coment rios: